பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சேதங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் சமாளித்தும் தாண்டியும், மனிதனின் வளர்ச்சியை மேலும் முன் எடுத்துச் செல்ல நல்லவர்களும் அறிவாளிகளும் ஞானிகளும் சித்தர்களும் கற்றறிவாளர்கள் பலரும் சிந்தித்திருக்கிறார்கள். ஊழிதோறும், ஊழிதோறும் உலகம் உய்ய, மனிதர் உய்ய, நாடு ய்ய, உலக நன்மைக்காக ஆழ்வார்கள் சிந்தித்திருக்கிறார்கள். அன்பு வழியை அருள் வழியைக் காட்டியுள்ளார்கள்.

ஒரு முறை, இரு சுடர், மும்மதிள், மூவடி, நானிலம், முப்புரி, ஈரடி, மூவுலகம், மூவேந்தர், முத்தமிழ், நாற்றிசை, நான்மறை, ஐவகை வேள்வி, ஐந்திலக்கணம், அறுதொழில், பஞ்ச பூதங்கள், ஐம்பொறி, ஐம்புலன், முக்குனம், முக்கண், நாற்றோள், நான்கு பயனரீடுகள், ஐவாய், ஆறு பொதி, நாற்படை, ஏழுலகம், அறுசுவை, ஐம்படை, முந்நீர், நெறிமுறை நால்வகை, மேதகு ஐம்பெரும் பூதங்கள், அறுபதம், ஏழ்விடை, ஏழு சுரங்கள் (சப்தசுரம்), அறுவகைச் சமயம், ஐம்பால், அறமுதல் நான்காய், மூர்த்தி மூன்று, இருவகைப் பயன் என்றெல்லாம், இன்னும் பலவகையாய்ப் பலவாறாய் அறிவின் தத்துவத்தை வளர்த்து, பாரதத்தின் நாகரிகத்தை மேம்படச்செய்து உலகிற்கு வழிகாட்டியாகப் பாரதத்தை உயர்த்தப் பாடுபட்டுப் பாடிய உயர்ந்த மனிதர்களில் ஆழ்வார்கள் அங்கமாகி உயர்ந்துள்ளார்கள் என்பதை அவர்களுடைய இனிய பக்திப் பாசுரங்களில் காண்கிறோம்.

தீயோரை நீக்கி நல்லோரை வாழ வைக்கவும், பாவத்தை முரியடித்து அறத்தை நிலை நாட்டவும் திருமால் அவதாரம் எடுத்தார் என்பது ஆழ்வார்களின் தத்துவமாகும். அதை அவர்களுடைய அருமையான பக்திப் பாசுரங்களில் நாம் கண்டு அறிகிறோம். அவைகளைப் படித்தும் பாடியும் பாராயணம் செய்தும், அவைகளின் கருத்துகளைப் பரப்பியும் மெய்சிலிர்த்து அவற்றின் இன்பத்தை அனுபவிக்கிறோம். ஆழ்வார்களின் புகழ் வாழ்க, வளர்க.