பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

முதியோர்களும் முக்கிய இடம் பெறுவர்), அறவோர்கள் (அறவழியில் நின்று சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் துறவிகள் முதலானோர்), விருந்தினர்கள் முதலியோரைப் பராமரித்தல், பாதுகாத்தல், உபசரித்தல் முதலிய சிறப்பான பல அறக்கடமைகளைக் கொண்ட மிகவும் இனிமையான குளிர்ந்த இல்வாழ்க்கையை மிகவும் சிறப்பாக மேற்கொள்ளுதலாகும்.

இல்வாழ்க்கையில் உள்ளவர்களின் கடமைகளைப்பற்றி நமது அறநூல்களும் சாத்திரங்களும் இலக்கியங்களும் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. ஒரு தனி மனிதனின் வாழ்க்கைப் பருவத்தை நான்கு கட்டங்களாக நம் அறிஞர்களும் சாத்திரங்களும் பிரித்துக் கூறி, அவற்றிற்குரிய கடமைகளையும் வகுத்துக் கூறியுள்ளார்கள். இந்தக் கருத்துகள் எக்காலத்திற்கும் எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதான சமுதாயப் பொதுக் கருத்துகளாக அமைந்துள்ளன. இந்த நான்கு பருவங்களை வடமொழியில் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனக் கூறுவர். பிரம்மச்சரியம் என்பது மாணாக்கப் பருவம். கிரகஸ்தம் என்பது இல்லறமாகும்.

பிரம்மச்சாரி என்றால் பொதுவாகத் திருமணம் ஆகாதவன் என்னும் குறுகிய பொருளில் இன்று நாம் புரிந்து கொள்கிறோம். அது சரியானதன்று. மனிதன் பிறந்தவுடன் குழந்தைப்பருவம் முடிந்தவுடன் கல்வி கற்கத் தொடங்க வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வங்களை நினைந்து ஆசி பெற்றுத் தமது கல்வியை ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் தொடங்கவேண்டும். ஆதி காலத்தில் குருக்களும் குருகுலங்களும் இருந்தனர். தொழிற் கல்வி குடும்ப அமைப்பிலும் பட்டறை அமைப்பிலும் நடைபெற்றது. சமுதாய வளர்ச்சியின் அடுத்தடுத்த கட்டங்களில் பள்ளிகளும், கலைக் கழகங்களும், பல்கலைக் கழகங்களும் உருவாகி வளர்ச்சி பெற்றன. இக்காலத்தில் தொடக்க நிலை. நடுநிலை - உயர்நிலை - மேல்நிலைப்பள்ளிகளும் கல்லூரி களும் பல்கலைக் கழகங்களும் பெருகி வளர்ந்து வருகின்றன. இக்காலத்திய கல்வி மிகவும் விரிவடைந்து வருகிறது. கடவுள்