பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

குறிப்பிட்டுள்ளேன். ஆயினும் அவைகளின் கருத்தாழத்தையும் இனிமையையும் கருத்துக்குறைவு ஏற்படாமல் சுவை குன்றாமல் இருக்கப் பல பாடல்களை முழுமையாக எடுத்துக் கூறி மேற்கோள் காட்டியுள்ளேன். அவை மிகைபடவிருப்பின் பொறுத்தருள்க.

திவ்யப் பிரபந்தத்தின் சீரிய கருத்துகள் மக்களிடம் விரிவாகச் செல்ல வேண்டும். பாரதப் பண்பாட்டின், அதன் தலைசிறந்த கலாச்சாரத்தின் அடிப்படையான கருத்துகள், நமது மக்களின் நீண்ட வரலாற்றில் எதிர்ப்பட்ட துன்ப துயரங்களை யும் தடைகளையும் இடையூறுகளையும் சமாளித்து அவை களைக் கடந்து வந்திருக்கின்றன; கடுமையான பாதைகளில் பயணம் செய்து வந்துள்ளன. அவைகளை நிலை நிறுத்த, உறுதிப்படுத்த இன்னும் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப் படுகின்றன. அடிப்படையான கருத்துகளை மக்களிடையில் பரப்புவது என்பது ஒரு கடினமான பணியாகும். ஆயினும் அப்பணிகளில் எத்தகைய சிரமங்கள் ஏற்பட்டாலும் தளர்ச்சி யடையாது தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமானதாகும்.

கருத்துகள் மக்களுடைய மனத்தில் வலுவாகப் பதிந்து விடுமானால் அதுவே ஒரு வல்லமைமிக்க பெளதிகச் சக்தியாக அமைந்துவிடும். பாரதத்திருநாட்டின் அறிவுச் செல்வத்தை மங்கவிடக்கூடாது, மழுங்கவிடக்கூடாது. அவை முடங்கி விடவும் கூடாது. ஜனநாயக மறுமலர்ச்சியின் புதிய சூழ்நிலைகளுக்கேற்பச் சித்தாந்தப் பணிகளை ஒரு வலுவான அறிவுப் பேரியக்கமாக நாம் நமது மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். அந்தப் பெரும்பணியில் ஒரு சிறு துளியாக இந்த நூலைத் தமிழ் மக்களிடம் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.

இந்த நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிடும் 'பழனியப்பா பிரதர்ஸ்' நிறுவனத்துக்கும் என் உளம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது முந்தைய நூல்களைச் சிறப்பாக ஆதரித்த நண்பர்களும், கல்வி நிலையங்களும், தமிழறிஞர்களும் தமிழ்ப் பற்றுமிக்கவர்களும் தமிழ்ப்பெருமக்களும் இந்த நூலையும் ஆதரிக்க வேண்டும் என்றும், படித்துப் பயன் பெற வேண்டுமென்றும் வேண்டுகிறேன்.

- நூலாசிரியர்.