பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிலப்பதிகாரம் -- _ - தாளாற்றித் தந்த பொருளெல்லாம், தக்கார்க்கு ளோண்மை செய்தற் பொருட்டு அதாவது பொருள் தேடுவதெல்லாம் தக்கவர்க்கு உதவுவதற்காகவே என்று மிகத் தெளிவாகக் கூறியுள்ளார், சிலப். பதிகாரத்து மக்கள் திருக்குறளின்படி நடந்தார்களா ? தாங்கள் தேடிக்குவித்த பொருளை யெல்லாம் தக்கார்க்கே தந்தார்களா ? தக்கார் என்பவர் சான்ருேர், நல்லொழுக்கம் நிறைதல், தீயொழுக்கம் அவிதல், இரண்டும்பெற்று ஆணவம் கொள். ளாது அடங்கியிருத்தல் ஆகியவற்றையே தம் கொள்கை. யாக உடையவரே சான்ருேர். -- 'ஆன்று, அவிந்து, அடங்கிய கொள்கைச் சான்ருேர் . என்று சான்ருேர் இலக்கணத்தைப் பிசிராந்தையார் (புறம். 191) என்னும் சங்ககாலப் புலவர் சுருங்கச் சொல்லி விளங்க'வைத்துள்ளார். ஆளுல் புலவர்கள் நாளடைவில் புறப்போர் செய்யும் மறவரையும் (புறம் 68) அகப்போர் செய்யும் பரத்தையரையும் (பதிற்றுப்பத்து 78) குறிக்கச் சான்ருேர் என்ற தண்டமிழ்ச் சொல்லப் பயன்படுத்தலாயினர். இப்பொருளே ஏற்பதாயின் இளங்கோவடிகள் காலத்து மக்கள் தாங்கள் .ே த டி ய பொருளைத் தக்கார்க்கே வேளாண்மை செய்தனர் என்று கூறலாம். அவர்கள் தங்கக் கூரை வேய்ந்து வாழுமாறு தக்காராகிய பரத்தையர்க்குத் தங்கள் செல்வங்களேத் தட்டுத்தடையின்றி அள்ளிக். கொடுத்த வள்ளல்களாக இருந்தார்கள் ஆதலின். இவ்வாறு அரசர் முதல் யாவரும் பரத்தையரை ஆத. ரித்துவந்த மக்களே நாகரிக வாழ்வினர் என்று கூறுவதும் போற்றுவதும் நாகரிகம் என்ற பண்பாட்டுச் சொல்லுக்கு நஞ்சூட்டிக் கொள்வதாகும். இளங்கோவடிகள் உள்ளதை உள்ளவாறு உரைத்து உள்ளத்தை தூய்மை செய்யும் உத்தமக் கவிஞர்களுள்