பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை சேரநாட்டு மன்னணுகிய செங்குட்டுவன் துஞ்சா முழவின் அருவி ஒலிக்கும் மஞ்சுகும் சோலே மலே காண் குவமென தனது தேவி வேண்மாளொடும், தம்பி இளங்கோவடிகளோடும் தன்னுடைய தலைநகராகிய வஞ்சி நகரினின்றும் புறப்பட்டு நால்வகைச் சே னே க ளு ம் புடைசூழ்ந்து வர பேராற்றங் கரையிலுள்ள மணற்குன்றிலே தங்கியிருந்தான். அப்போது அம்மலையில் வாழ்கின்ற மக்கள் கண்ணகி தன்னுடைய கணவனுேடு விமானமேறி விண்ணுலகம் சென்ற அதிசயத்தைத் தங்கள் அரசனிடம் கூற விரும்பித் தங்கள் மலையில் கிடைக்கக்கூடிய பலவகையான காணிக். கைப் பொருள்களுடன் வந்தனர். அப்பொருள்களை அவ. னிடம் சமர்ப்பித்துவிட்டு அரசே, நமது மலையில் ஒரு வேங்கை மரத்தினடியில் இதுவரையில் பாராத ஒரு புதுமையைக் கண்டோம். ஒரு பெண் மனவருத்தத்துடன் நின்ருள். ஆகாயவிமானம் வந்தது. அதில் அவள் வானவர் போற்ற ஏறிச் சென் ருள், அவள் எந்த நாட்டினளோ, எவர் மகளோ அறியோம் ' என்று கூறினர். அப்போது அரசனுடன் இருந்த தண்டமிழ்ப் புலவரான சாத்தளுர் கோவலன் கொலையுண்டதையும் அதற்காகக் கண்ணகி பாண்டியனிடம் வந்து வழக்குரைத்ததையும் மதுரையை அழித்ததையும் மன்னவன் இறந்ததையும் அதன் காரணமாகப் பாண்டிமாதேவி உயிர் துறந்ததையும் விரிவாக எடுத்துச் சொன்னர்.