பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிலப்பதிகாரம் அதைக் கேட்டதும் இளங்கோவடிகள் அரைசியல் பிழைத்தோர்க் கறங்கூற் ருவது உம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினே உருத்துவந் துட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்று கூறி அவ்வாறே சிலப்பதிகாரம் என்னும் காவியத்தை இயற்றினர். இளங்கோடிகள் மூன்று உண்மைகளே உலகத்தார்க்கு எடுத்து ஒதுவதற்காகவே சிலப்பதிகாரத்தை எழுதியதாகக் கூறுகின் ருர். அந்த மூன்று உண்மைகளுள் ஒன்ருகிய * ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதை எவ்வாறு விளக்குகின்ருர் ? இளங்கோவடிகள் ஊழுண்மையை நிலைநாட்டுவதற். காக மேற்கொள்ளும் முறை மிகவும் விசித்திரமானது காவிய நீதிக்குப் புறம்பானது. ஒரு கவிஞன் தன்னுடைய காவியம் மூலமாக ஒருண்மையை உணர்த்த விரும்பினுல் அவன் அந்த உண்மை இது என்று கூருமல், அதை வாசகர் களே காவிய நிகழ்ச்சிகளிலிருந்து ஊகித்து அறிந்துகொள்ளுமாறே செய்வான். அதுதான் காவிய நூலுக்கும், அறிவு, அறநூல்களுக்கும் உள்ள வேறுபாடு. அறிவு நூலும் அறநூலும் அறிவுமூலமாக அறிந்துகொள்ளச் செய்யும். காவியமோ உணர்ச்சிமூலமாகவே உணர்ந்துகொள்ளச் செய்யும். இளங்கோவடிகள் தாம் நிலைநாட்ட விரும்பும் மற்ற இரண்டு உண்மைகளையும் அவ்வாறே ஊகித்துக்கொள்ளுமாறு செய்கின் ருர், ஆளுல் ஊழுண்மை விஷயத்தில் மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதற்குக் காரணம் சிலப்பதிகாரக் கதையில் காணப்படும் நிகழ்ச்சிகள் எல்லாம் இப்பிறப்பில் நிகழ்ந் தவை. அவற்றைக்கொண்டு முற்பிறப்பு நிகழ்ச்சிகளே ஆசிரியர் கூறினுலன்றி அறிந்துகொள்ள முடியாது. அதல்ை கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளிலிருந்து நாம்