பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சிலப்பதிகாரம் - - - கலிங்க நாட்டில் சிங்கபுரம் கபிலபுரம் என இரண்டு நகரங்கள் இருந்தன. சிங்கபுரத்தரசன் வசு என்பவனுக்கும் கபிலபுரத்தரசன் குமரன் என்பவனுக்கு மிடையே போர் மூண்டது, அதல்ை இர ண் டு நகரங்களுக்குமிடையில் மக்கள் போக்குவரத்து நடைபெறவில்லை. ஆயினும் கபிலபுரத்திலிருந்த சங்கமன் என்பவன் தன்னிடமுள்ள நகைகளைச் சிங்கபுரத்தில் விற்றுப் பெரும்பொருள் தேடவிரும்பின்ை. அவனும் அவனுடைய மனைவியும் சிங்கபுரத்து அங்காடியில் தங்கள் அணிவலன்களைக் காட்டிக்கொண்டிருந் தனர். அப்போது அ வ ர் க ள் கரந்துறைமாக்களில் ' (அதாவது கபிலபுரத்தினர் தெரியாவண்ணம் சிங்கபுரத்தினர் போல் வேடந்தரித்தவர்களாய்த்) தோன்றினர். அந்த நகரத்து அரசனுக்குக் கோத்தொழில் செய்வோன் (அதாவது அரசனுக்காக அந்த நகரத்தைப் பாதுகாக்கும் பொறுப்புடைய காவற்படைத் தலைவன்) ஆகிய பரதன் என்பவன் அவ்வழியாக வந்தவன் சங்கமன்மீது சந்தேகம் கொண். டான். கபிலபுரத்தரசனுடைய ஒற்றன் என்று எண்ணின்ை. அவனைப் பற்றிக்கொண்டு அரசனிடம் சென்ருன். அரசன் ஆணையின்மேல் சங்கமனக் கொல்வித்தான். இப்பரதன் கோவலனுகவும் சங்கமன் பொற்கொல்லஞகவும் பிறந்தனர். பரதன் சங்கமனக் கொல்வித்ததால் கோவலனைப் பொற்கொல்லன் கொல்வித்தான். இவ்வாறு கோவலன் தன் ஊழ்வினை காரணமாகவே கொலையுண்டான் என்று இளங்கோவடிகள் கூறுகின்றர். தீமை செய்தவன் தீமையை அனுபவிப்பான் என்றுமட்டுமின்றி அனுபவிக்கவேண்டும் என்றும் கூறலாம். ஆளுல் போன பிறப்பில் கொலை செய்தான் என்பதை மட்டும் வைத்து, இந்தப் பிறப்பில் கொலையுண்ணவேண்டும் என்று கூற முடியாது. கொலைசெய்தவன் எத்தகையவன், அவன் எவனே, எதற்காகக் கொலை செய்தான் என்பதையும் ஆராயவேண்டும். ஒரு நாட்டான் பிறநாட்டிற்குள் நுழைய விரும்பில்ை அந்த நாட்டின் அமைதி பெறுவது அவசியம். இந்த விதி