பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிலப்பதிகாரம் கோவலன் மதுரையிலுள்ள பொற்கொல்லல்ை மடியவேண்டும் என்பது அவனுடைய ஊழ்வினை. மதுரைக்குப் போகவேண்டுமானுல் மாதவியைவிட்டு நீங்கவேண்டும். அதனுல் ஊழ்வினையே அவர்கள் இருவரையும் பிரிப்பதாயிற்று என்று கவிஞர் கருதுகிருர். ஆணுல் ஊழ்வினையின் உதவியில்லாமலே அவர்கள் பிரிந்ததற்குக் காரணம் கூறலாம். முதலில் கோவலன் பாடிஞன், அவன் வேறு பெண்களிடம் ஆசையுடையான் என்று மாதவி எண் ணினுள். அவ்வாறு எண்ணக் காரணங்கள் இருக்கவே செய்தன. கோவலன் மாதவி வீடே தஞ்சம் என்றிருந்தாலும் அவளுடனேயே எப்போதும் இருந்தான் என்பதில்லை. அவன் எப்போதும் வறுமொழி யாளரொடும் வம்பப் பரத்தரொடுங் குறுமொழிக் கோட்டித் திரிக் ததாக. அவனே கூறுகின்ருன் (சிலப். 16:65-70). இளங்கோவடிகளும் காவரிப்பூம்பட்டினத்தில் தென்றல் உலவியது கோவலன் பாணரொடும் பரத்தரொடும் திரிந்ததுபோல் இருந்ததாகக் கூறுகின்றர். வம்பப் பரத்தர் என்பவர் புதிய காமநுகர்ச்சியை விரும். பும் காமுகர் என்று அடியார்க்குநல்லார் கூறுகின்றர். ஆதலால் கோவலன் நாடோறும் புதுப்புதுப் பரத்தையை நாடிச் சென்றுகொண்டிருந்தான் என்பது போதரும். முன்பகல் தலைக்கூடி கண்பகல் அவள்நீத்துப் பின்பகல் பிறர்த்தேரும் (கவி 47) அதாவது முற்பகலில் ஒருத்தியிடத்தே கூடியிருந்து உச்சிக்காலத்தில் அவளைக் கைவிட்டுப் பலரிடத்தே சென்று மாலை. யில் கூடுதற்கு வேறு சிலரைத் தேடுகின்றவனுயிருந்தான் என்று கூறில்ை தவருகாது.