பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சிலப்பதிகாரம் அதாவது நீ மனவருத்தமின்றி மதுரைநகர்க்குச் சென்று நீங்கள் இருவரும் தங்கி இல்லறம் நடத்துதற்கு வேண்டிய வீடு ஒன்று அமர்த்திக்கொண்டு வருவாய் என்று கூறினர். அவ்வாறே கோவலன் மதுரைக்குள் சென்ருன், அவன் சென்ற நோக்கம் தன் இனத்தாராகிய வணிகரைக் கண்டு பேசி தான் தங்க வீடும் வாணிகம் செய்யக் கடையும் ஏற். பாடு செய்யவேண்டும் என்பது. ஆனுல் அவன் அந்த நோக்கத்தின்படி நடக்கவில்லை என்பதுமட்டுமன்று, அதை அறவே மறந்துவிடவும் செய்தான். அவன் போன காரியம் வேறு, செய்த காரியம் வேறு. அவன் அன்று காலேமுதல் மாலைவரை நகரத்தில் வீதி தெரு முடுக்கு எல்லாவற்றிலும் அலேந்து திரிந்தான், ஆல்ை அவன் அந்த நகரத்திலிருந்த அறங்கூறவையம், பள்ளிகள், கோயில்கள், பட்டிமன்றம் முதலிய எதையும் பார்க்கவில்லை. அவன் நின்று சுவையாகப் பார்த்த வீதிகள் ஏழே. அவற். றையே இளங்கோவடிகள் ஊர்காண் காதையில் வர்ணிக். கின்ருர். அந்த வீதிகளை அடியார்க்குநல்லார் இளங்கோவடிகள் கூறும் அடைமொழிகளுடன் தனியாக எடுத்து எழுதுகின்ருர். அவை 1. மகிழ்தரு வீதி, 2. இருபெரு விதி, 3. அங்காடி வீதி, 4. பயங்கெழு வீதி, 5. நலங். கினர் வீதி, 3. அறுவை வீதி, 7. கூல வீதி. இவற்றுள் மூன்று வீதிகளே அடைமொழிகளுடன் காணப்படுகின்றன. மகிழ்தரு வீதி என்பது பரத்தையரில் தாழ்ந்த தரத்தராகவுள்ள கடைகழி மகளிர் வாழுமிடம். பயங்கெழு வீதி என்பது பலவகை இரத்தினங்கள் விற்கும் கடைத்தெரு, நலங்கினர் வீதி என்பது நாலுவகைப் பொருள்கள் விற்கும் கடைத்தெரு. இவ்வாறு இளங்கோவடிகள் இந்த மூன்று வீதிகளுக்கே அடைமொழி கொடுத். ததிலிருந்து கோவலன் அந்த வீதிகளைப் பார்ப்பதிலேயே அதிகப் பிரியமுடையவன் என்று விளங்கும். இளங்கோவடிகள் கோவலன் பார்த்த ஏழு வீதிகளையும் ஏறக்குறைய நூற்றைம்பது வரிகளில் வர்ணிக்கின்ருர்.