பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1s2 சிலப்பதிகாரம் ஆதலால் கோவலனேக் கொலை செய்யுமாறு ஆணே தந்த. தற்குக் காரணம் அவனுடைய காமமேயன்றி ஊழ்வினை யன்று. இந்த விஷயத்தைக் குமரகுருபரசுவாழிகள் ஒர் அழகான உவமைமூலம் தெளிவாக விளக்குகின் ருர், ஊற்றம் இறுவிளக்கம் ஊழுண்மை காண்டுமென்று ஏற்ருர் எறிகால் முகத்து ’ ஒரு விளக்கில் திரியும் நெய்யுமிட்டு ஏற்றிக் காற்று பலமாக வீசுமிடத்தில் வைக்கின்றேன். அது அணைந்துவிடுகிறது. அருகிலுள்ள ஒருவரிடம் அணைந்தது ஏன் என்று கேட்! கின்றேன். அவர் காற்றுவீசியதால் எ ன் று கூருமல், அதற்கு அணையவேண்டிய ஊழ் அமைந்திருந்ததால் என்று கூறுவாராயின் அதை ஐந்து வயதுக் குழந்தைகூட ஏற்றுக்கொள்ளாது. அதுபோலவே இருக்கின்றது இளங்கோவடிகள் அரசன் காமவயத்தனய் இருந்தபடியால் அவ்வாறு பணித்தான் என்று கூருமல், ஊழ்வினே உண்மையால் பணித்தான் என்று கூறுவது. கோவலன் இறந்ததற்குக் கோவலன், கொற்றவன் இருவருடைய காமமே காரணம், ஊழ்வினை யன்று. ஆகவே பண்டைப் பிறவிகளில் செய்த ஊழ்வினை உருத்துவந்து ஊட்டவில்லை. இந்தப் பிறவியில் செய்த ஊழ்வினேயே உருத்து வந்துாட்டிற்று. கோவலன் காமத்தால் அழிந்தான், கொற்றவன் காமத்தால் குன்றிய அறவுணர்ச்சியை மீண்டும் பெற்று அதற்காகத் தன் உயிரைக் கொடுத்துத் தன் வாழ்வைப் புனிதமாக்கினன். இளங்கோவடிகள் சிலப்பதிகார காவியத்தை இயற்றிய தற்கு மூன்று காரணங்கள் கூறுகின்ருர் என்றும் அவற்றுள் * ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதை விளக்கிக்