பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X குடும்பக்கட்டுப்பாடுபற்றி இவர் எழுதிய நூலே தமிழில் சிறந்த தாகும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தார் பாராட்டுப் பத்திாம் தந்துள்ளனர். இப்போது I 1-فيه பதிப்பு. இவர் " ஆப்பரேஷனுக்கு அஞ்சு - வேண்டாம் ' என்ற நூலும் செய்துள்ளனர். - பாரதியார் பாடல்களை கெல்லை மாவட்டத்திலும் செட்டிநாட்டிலும் முதன் முதல் பாவச் செய்தவர். இவரே பாரதியாாைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் முதன் முதல் பத்திரிசையில் எழுதியவர். பாரதியார் பாடல்கள் சிலவற்றைப் பொறுக்கி, அவற்றுடன் பாரதி. யாரின் வாழ்க்கைக் குறிப்பும் அரும்பதவிளக்கமும் சேர்த்துச் சிறு பிரசுரமாக அச்சிட்டு வழக்கினர். 1958ல் பாதி சங்கத்தார் இவருக் குக் கேடயம் வழங் னெர். இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறந்த புலவர். பல நூல்கள் எழுதியும் பல நூல்கள் மொழிபெயர்த்தும் உளர். இவர் நூல்களிற் சில, சென்னை அரசாங்கத்திடம் முதற் பரிசு பெற்றுள்ளன. இவருடைய மொழிபெயர்ப்புத் திறமையைப் பேராசிரியர்கள் தெ. பொ மீனுட்சிசுந்தாளுர், கே. சுவாமிநாதன், சா. பி. சேதுப்பிள்ளை போன்றவர்கள் வியந்து எழுதியுள்ளனர். இவருடைய எழுபத்தைந்தாம் ஆண்டு கிறைவு விழாவில் வெளி யிடும் கினைவு மலருக்கு, இராஜா சர். மு. அ. முத்தைய்யா செட்டியார், டாக்டர் ஏ. லெட்சுமணசாமி முதலியார் போன்ற அறிஞர்கள் எழுபதின்மர் இவருடைய பண்புகளையும் சேவைகளையும் பாராட்டி எழுதியுள்ளனர். இவர் சாட்டுக்காக சகலவித தியாகங்களும் செய்த தேச பக்தர் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. கு. காமராஜர் கூறி யிருப்பதும் இவருடைய கல்வித்தேர்ச்சி புகழத்தக்கது. இவருடைய தேச சேவை போற்றத்தக்கது என்று பாாத இராஷ்டிாபதியாக இருந்த டாக்டர் எஸ். இாாதாகிருஷ்ணன் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கன.