பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XIII பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், தலைவர். தமிழ்த்துறை (கீழ்காட்டுப் பிரிவு) அண்ணுமலேப் பல்கலைக்கழகம். திரு. பெர். திரிகூடசுந்தரம் அவர்கள் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய சொர்ணம்மாள் நினைவுச் சொற் பொழிவுகள் அடங்கிய நூலைப் படித்தேன். இச் சொற் பொழிவுகள் மூன்றும் சிலப்பதிகாரம் என்னும் பெரும் நூலினைப் பற்றியவை. திரு. திரிகூடசுந்தரம் அவர்கள், நமது காட்டிற்கு உழைத்த நல்லோர். தமக்குப் பொருத்தமானவை எனத் தோன்றும் கருத்துக்களைத் தயங்காமல் எடுத்துரைக்கும் இயல்புடையவர்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இச் சொற்பொழிவுகள் அமைந்துள்ளன. இச் சொற்பொழிவு களில், இவர்கள் கூறியுள்ள முடிவுகள். கருத்து வேறுபாட்டிற்கு உரியவை; பெரும்பாலோர் ஏற்றுக்கொள்வர் என் எதிர்பார்த்தற்கு உரியன அல்லாதவை. ஆயினும், இவர்கத் தமது முடிவிற்கு உரிய செய்திகளைத் திறம்படத் தொகுத்து கூறித் தமது கொள்கையினை நிறுவ முயற்சிசெய்திருப்பது, இவர்கள், சட்டக்கலைஅறிவிற் சிறந்தவர்கள் என்பதற்குச் சான்ருகும். இந்நூலில் இடையிடையே காணப்படும் மேற் கோள்கள், இவர்களின் பரந்த தமிழ்ப்புலமையினைப் புலப்படுத்தும். இந்நூலில் இடையிடையே கலந்து வரும் பிற மொழிச்சொற்கள் குறைக்கப்பட்டிருக்கலாம். இந்நூல் முழுதிலும் ஒழுக்கத்தின் உயர்வு, வற்புறுத்தப் பெற்றிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் நன்றி. என் வேண்டுகோளுக்கு இணங்கிக் காணிக்கை ஏற்ற கனம் ராஜா அவர்கட்கும், அணிந்துரை அளித்த பேராசிரியர்கட்கும் என் மனமுவந்த நன்றி.