பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o; அப்போது நான் தமிழில் இலக்கியத் திறனுய்வு ’’ என்னும் பொருள் பற்றிப் பேசினேன். இப்போது தமிழி. லுள்ள பேரிலக்கியங்களுள் ஒன்ருகிய சிலப்பதிகாரம் பற்றிப் பேசுவதற்கான பேறு பெற்றுள்ளேன். யாமறிந்த புலவரிலே கம்பனேப்போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலே, உண்மை வெறும் புகழ்ச்சி யில்லே. என்று பாரதியார், தமிழ்ப் புலவர்களிலே வள்ளுவர், கம்பன், இளங்கோ என்னும் மூவரே தலைசிறந்தவர் எனப் பாராட்டு கின்ருர். சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலுள்ள இலக்கியங்கள் எல்லாவற்றிலும் திளைத்தபோதிலும், இந்த மூன்று புலவர்களுடைய நூல்களிலேயே அளவற்ற ஈடுபாடு உடையவராய் இருந்தார்கள். இவர்களைப்பற்றி நூல்கள் இயற்று வதிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் சொற்பொழிவுகள் ஆற்றுவதிலும் அன்பர்களுடன் .ே ப. சு. வ தி லு ம் இறவாத இன்பம் துய்த்தார்கள். இதை எண்ணியேதான், இந்தச் சொற்பொழிவுகளைத் துவக்கிவைத்த பேராசிரியர் மு. வரதராசனர் அ வ ர் க ள் இளங்கோவைப்பற்றியே பேசியுள்ளார்கள் என்று எண்ணு கின்றேன். அடியேனும் அதே காரணத்தால் இளங்கோ. வடிகள் அருளியுள்ள சிலப்பதிகாரம்பற்றியே பேச விரும்பு கின்றேன். உளநூற் புலவர்கள் உள்ளத்தில் எழுகின்ற நிகழ்ச்சி களே எல்லாம் உணர்தல், அறிதல், துணிதல் என்று மூவகை. யினவாகக் கருதுவர். இந்தப் பாகுபாட்டை மனத்தில் கொண்டே அறிஞர்கள் நூல்களை எல்லாம் உணர்ச்சி நூல்கள், அறிவுநூல்கள், அறநூல்கள் என்று பிரிக்கின்ருர்கள். இவற்றைப் பாரதியார் முறையே காவிய நூல்கள், ஞானக்கலைகள், வேதங்கள் ' என்று கூறுவர். அறிவு நூல்களிலும் அற நூல்களிலும் உணர்ச்சி காணப்பட மாட்டாது. கருத்தே காணப்படும். ஆனல்,