பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உணர்ச்சி நூல்களாகிய காவியங்களில் உணர்ச்சி மேலோங்கி நிற்பினும், கருத்து அடிநிலையில் நிற்கவேசெய்யும். நான் சிலப்பதிகாரக் காவியத்திலுள்ள உணர்ச்சியூட்டும் கவிநயங் களைப்பற்றிப் பேசாமல் கருத்துநயங்களுள் சிலவற்றை மட்டுமே எடுத்து ஆராய விரும்புகின்றேன். எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு ஆளுல் நாம் ஆராய்கின்ற பொருளின் உண்மை இதுவென்று அறிவதற்கு உற்ற துணையாகவிருப்பது இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த பேரறிஞர் ஒருவர் காய்தல் உவத்தல் அகற்றி யொருபொருட்கண் ஆய்தல் அறிவுடையார் கண்ணதே - காய்வதன் கண் உற்றகுணம் தோன்ரு தாகும், உவப்பதன்கண் குற்றமும் தோன்ருக் கெடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையே யாகும். இதனேயே இக்காலத்துப் பேரறிஞர் ஜூலியன் ஹக்ஸ்லி என்பவரும், " அறிவு தேடும்போது உண்மையைக் காண வேண்டு மென்னும் ஆசைக்குத் தவிர வேறு எவ்வித ஆசைக்கும் உணர்ச்சிக்கும் இடந்தராது மறுத்துவிடுவதே ஆராய்ச்சி முறை யாகும் ' என்று வற்புறுத்துகிருர். இந்தப் பெரியோர்கள் உரைகளே இதயத்தில் வைத். துக்கொண்டே நானும் ஆராய முயன்றுள்ளேன். இன்று நான் ஆராய்வதற்கு எடுத்துக்கொண்ட பொருள் கண்ணகி. யின் கற்பு’ என்பதாகும்.