பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு பொ. திரிகூடசுந்தரம், எம். ஏ., பி. எல்., இளங்கோவடிகள் படைத்த கண்ணகியே எக்காலத்தும் கற்புக்கு இ ணே ய ற் ற எடுத்துக்காட்டு என்று அறிஞர்கள் எழுதியும் சொற்பொழிவாற்றியும் வருகிருர்கள். ஒரு பேராசிரியர் கண்ணகியைப் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்னும் குறளின் இலக்கியமாகக் காண்கின்ருர். மற்ருெரு பேராசிரியர் பண்டைத் தமிழ் மகளிருள் முடிமணி யாகத் திகழும் கண்ணகியார் என்று புகழ்கின்ருர். இளங்கோவடிகளும் தமது காவியத்தின் தொடக்கத்திலேயே, போதிலார் திருவினர் புகழுடை வடிவென்றும் தீதிலா வடமீனின் றிறமிவள் திறமென்றும் ' கூறுகின்றர். சாதாரணமாக ஒரு பெண்ணின் கற்பைப் புகழவேண்டுமானல் புலவர்கள், இவளுடைய கற்பு அருந். ததியின் கற்பை ஒக்கும் என்று கூறுவது வழக்கம். ஆனல் அடியார்க்கு நல்லார் இந்த வரிகளுக்குப் பொருள் கூறும் போது திருமகளுடைய வடிவு இவள் வடிவையொக்கும், அருந்ததியுடைய கற்பு இவள் கற்பை யொக்கும் என்று கூறுகின்ருர். இளங்கோவடிகள் தாம் சிலப்பதிகாரம் எ ன் னும் காவியத்தை இயற்றியதற்குக் கூறும் மூன்று காரணங்களுள் ஒன்று உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தல் என்ப தாகும். கண்ணகியின் கற்பைக் காட்டியே இந்த உண். மையை நாட்டுகின்ருர்.