பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 7 உதாரணமாக : இளங்கோவடிகள் இந்திரவிழா. வெடுத்த காதையில் வடமீன் கற்பின் மனேயுறை மகளிர் மாதர்வாண் முகத்து மணித்தோட்டுக் குவளைப் போதுபுறங் கொடுத்துப் போகிய செங்கடை விருத்திற் றீர்ந்தில தாயின் யாவதும் மருந்துந் தருங்கொலிம் மாநில வரைப்பென என்று கூறுவது தொல்காப்பியர் பொருளதிகாரம் 272 ஆம் குத்திரத்தில் கூறும் புரையறம் தெளிதல் என்று கூறுவ. தைத் தழுவியதாகும். செங்குட்டுவன், இமயவெற்பன் கல் தராவிட்டால் இன்னவாறு செய்வேன்' என்று கூறும்போது குறிப்பிடும் காஞ்சி, வஞ்சி, கொற்றவள்ளே முதலியவை அனைத்தும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தையே பின்பற்றியவை. இளங்கோவடிகள் கட்டுரை காதையின் இறுதியில், தெய்வங் தொழாஅள் கொழுநற் ருெழுவாளேத் தெய்வங் தொழுந்தகைமை திண்ணிதால் - தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து என்று கூறுவது திருவள்ளுவருடைய, தெய்வங் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை என்னும் குறளேயும், வஞ்சினமாலையில், முற்பகற் செய்தான் பிறன் கேடு தன்கேடு) பிற்பகற் காண்குறு உம் . என்று கூறுவது திருவள்ளுவருடைய, பிறர்க்கின்ன முற்பகற் செய்யிற் றமக்கின் ை பிற்பகற் ருமே வரும் . என்னும் குறளேயும் அடியொற்றி வருவன.