பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் கால்கோட் காதையில் காவா காவிற் கனகனும் விசயனும் (159) என்பது, " யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு ' என்னும் குறளேயும், அழற்படு காதையில், வருவிருந்தோம்பி மனேயறம் முட்டாப் பெருமனேக் கிழத்தியர் (132–3) என்பது செல்விருக் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் கல்விருந்து வானத் தவர்க்கு ' என்னும் குறளையும், ஊர்சூழ்வரியில், அல்லலுற் ருற்ரு தழுவாளேக் கண் டேங்கி (15) என்பது, " அல்லற் பட்டாற்ரு கழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை என்னும் குறளேயும் நினைவூட்டுவனவாகும். இவ்வாறு இளங்கோவடிகள் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் பின்பற்றுவதால், கற்பின் இலக்கணத்தை அறிவதற்கு அந்த இரண்டு நூல்களையும் துணையாகக் கொள் வது பொருத்தமாகும். தொல்காப்பியர் கற்புக்கு இரண்டுவிதப் பொருள்கள் கூறுகின்ருர் ஆல்ை அந்த இரண்டு பொருள்களும் ஒன். ருேடொன்று மிகவும் நெருங்கிய தொடர்புடையனவாக இருப்பதால், ஒரேபொருள் இருவிதமாகக் கூறப்படுகின்றது என்றும் கூறத்தகும். முதலாவதாகத் தொல்காப்பியர் கற்பியல்' என்னும் பகுதியின் தொடக்கத்தில் : r கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோ கொடுப்பக்கொள் வதுவே ' என்று கூறுகின்றர். அதற்கு இளம்பூரணர்,