பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 9 ' கற்பென்று சொல்லப்படுவது, கர ண த் தொ டு பொருந்திக் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழவன் கொள்ளுதற்குரிய மரபினையுடைய கிழத்தியைக் கொடுத்தற்குரிய மரபினையுடையார் கொடுப்பக்கொள்வது என்று பொருள் கூறுகின்ருர். இதன் தேர்ந்த பொருள் கொடுப்பக் கொள்வது கற் என்பதாகும். தலைவன் தலைவியை அவளுடைய தமர்க்குப் பொருள் கொடாமலும் அவரிடமிருந்து பெறலாம். பொருள் கொடுத்தோ அல்லது அவர்க்குச் சேவைசெய்தோ பெறலாம். போதுமான பொருள் இல்லையாயின் தலைவன் பொருள்தேடச் செல்வான். இதை வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் * 5 г5јт று கூறுவர். பொன்னடர்ந்தன்ன ? என்னும் அகப்பாட்டில் ( 279), தலைவன் ஈண்டுள்ள பொருள் கொடுத்தாற் பெறல் அரியளாயின் தன்னே வழிப்பட்டால் தந்தை தரு. வனே ? அது நமக்கரிதாகலின் இன்னும் பொருள் நாம் மிகத் தேடிவந்து வரைதும் என்று எண்ணிப் பொருள் தேடப் பிரியக் கருதுவதை அறியலாம். தலைவன் தலைவியை அவளுடைய உறவினரிடம் பெற்றபின் இல்லறம் நடத்துவது கற்பு என்று, மறைவெளிப் படுதலும் தமளிற் பெறுதலும் இவை முத லாகிய இயல்நெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே என்று தொல்காப்பியர் செய்யுளியல் சூத்திரத்தில (500) கூறுகிருர், இந்த இரண்டு சூத்திரங்களிலிருந்தும் நாம் அறியக் கிடக்கும் விஷயங்கள் இரண்டாகும். ஒன்று த ல வ ன் கலேவியைத் தமரிடமிருந்து தானமாகவோ விலையாகவோ பெறுவது. தலைவனும் தலைவியும் மனித ஆன்மாக்களாக,