பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிலப்பதிகாரம் 2. திருமணச் சமயத்தில் தலைவனிடம் இவளே இன்ன வாறு பாதுகாப்பாய் ' எனவும், தலைவியிடம் இவற் கின்ன. வாறே குற்றேவல் செய்தொழுகு” எனவும் அங்கியங்கடவுள் அறிகரியாக மந்திர வகையாற் கற்பிப்பர். ' 3. திருமணம் நடந்த பிறகு தலைமகன் தலைமகட்கு * அந்தணர் திறத்தும், சான்ருேர் தே அத்தும் - ஐயர் பாங்கினும் அமரர்ச் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் கற்பிப்பன். இவ்வாறு நச்சிர்ைக்கினியர் கற்பு என்னும் பெயர் வந்தவிதம் கூறுவதிலிருந்து தலைவன் தலைவி உறவு ஆண்டான் அடிமை உறவே என்பது தெளிவாகும். இனித் திருவள்ளுவர் கற்புக்குக் கூறும் இலக்கணம் யாது என்று பார்ப்போம். தொல்காப்பியர் பொருளதி. காரத்தில் களவியல் என்பதை வகுத்து அதனை அடுத்துக் கற்பியல் என்பதை வகுத்துள்ளனர். அ து .ே பா ல் திரு. வள்ளுவர் காமத்துப்பாலில் களவியலே வகுத்து அதனை அடுத்துக் கற்பியலை வகுத்துளர். ஆனல் அவர் கற்பியலில் கற்பின் இலக்கணத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. கற்புக் காலத்து நிகழும் சில காரியங்களைப்பற்றி மட்டுமே கூறுகிருர். அவருடைய கற்பியலில் உள்ள குறட்களில் கற்பு என்னும் சொல்லைக்கூடக் காணவில்லை. அதை அறத்துப்பாலிலுள்ள, பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின் என்னும் குறள் ஒன்றிலேயே காணலாம். அக்குறளுக்குப் பரிமேலழகர் கற்பு என்னும் கலங்காநிலைமை உண்டாகப் பெறின் ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம் பட்ட பொருள்கள் யாவை உள என்று உரைக்கின்ருர். ஆகவே தொல்காப்பியர் பெண்ணே ஒருவரிடமிருந்து பெறும் பொருள் அல்லது வஸ்துவாகக் கருதிக் கற்புக்கு இலக்கணம் கூறியது போலவே, திருவள்ளுவரும் பெண்ணே ஒரு வஸ்து வாகவே கருதுகிறர். ஆணப்போலவே பெண்ணும் ஓர் ஆள்,