பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சிலப்பதிகாரம் -- திருவள்ளுவர் கணவனுக்கு மனேவி வாழ்க்கைத். துணை என்று கூறியவர் மனைவிக்குக் கணவன் வாழ்க்கைத் துணை என்று கூறவில்லை. அவன் இல்லாளின் தெய்வமே ஆவான். தெய்வத்தின் பண்புகளேயும் செயல்களையும் யாரால் வரையறுக்க இயலும் ? இனித் தலைவி மேற்கூறிய இலக்கணத்துக்கேற்பத் தலைவனிடம் நடந்துகொள்ளவேண்டிய விதங்கள் இவை என்று தொல்காப்பியர் கூறுவதைப் பார்ப்போம். தொல்காப்பியர் தலைவியின் பண்புகள் என்று கற்பு, காமம், ஒழுக்கம், பொறை, நிறை, விருந்துபுறந்தருதல், சுற்றம் ஓம்பல் முதலியவற்றைக் (தொல். பொருள். 152) கூ, mகிருர். கற்பு என்பது கணவன் முதலியோர் கற்பித்த நிலைய,இல் நிற்கும் நல்லொழுக்கம் என்று நச்சிஞர்க்கினியர் கூறுகின்றர். , ஆகவே தலைவி தலைவன் கற்பித்தபடி நடப்பாள், அலப்னிடம் அன்புசெய்வாள்; ஒழுக்கமாக நடந்துகொள். வாள்; தலைவன் தீமை செய்தால் பொறுத்துக்கொள்வாள்; அதனுல் தன் மனத்தில் உண்டாகும் துன்பத்தை வெளியே புலப்படக் காட்டாள்; விருந்தினரையும் சுற்றத்தாரையும் பாதுகாப்பாள். ஆனல் தலைவன் ஆண்டான்; அவனுடைய செயல். களுக்குக் கட்டுப்பாடு கிடையாது. அதனுல் அவன் வேறு மனைவியரை மணப்பான்; காமக்கிழத்தியரை வைத் துக்கொள்வான்; பரத்தையரிடம் சென்று வருவான். தலைவி அடிமையேயாயினும் உயிருள்ளவள், ஆதலால் அவள் மனத்தில் வருத்தம் உண்டாகவே செய்யும், ஆளுல் அவள் தலைவன் செய்வதைப் பொறுத்துக் கொள்ளவே வேண்டும்; அதுமட்டுமன்று தன்னுடைய வருத்தத்தை யாருக்கும் புலப்படுமாறு காட்டிக் கொள்ளவுங்கூடாது. அப்படியாயின் அவள் எவ்விதம் நடந்துகொள்ள வேண்டும் ?