பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சிலப்பதிகாரம் 3. மூன்ருவதாகத் தலைவி தலைவனுடைய பரத்தமை யைப் பிறரிடமிருந்து மறைக்கவே செய்வாள், இ த னே த் தொல்காப்பியர் புறஞ்சொன் மாணுக்கிளவி (பொருள் 272) என்பதில் அடக்குவர். தண்ணத் துறைவன் கொடுமை கம்முன் காணிக் கரப்பா கும் மே என்று தோழி கூறும் குறுந்தொகைப் பாட்டும் (9) இதையே விளக்குகின்றது. இந்த வரிகளுக்கு உ. வே. சாமிநாதய்யர் தண்ணிய துறையையுடைய தலைவனது கொடுமையை நம்முன்னே சொல்லுவதற்கு நாணமுற்று மறைத்தலையுடைய சொற்களைச் சொல்லுகின் ருள், ஆ த லி ன் கற்புக்கடம் பூண்டவ ளாளுள் என்று உரை கூறுகின்ருர். 4. நான்காவதாகத் தலைவன் பரத்தை வீட்டுக்குச் சென்றுவிட்டு விருந்தினருடன் வந்தால் அப்பே. து அவனுடன் ஊடாதிருப்பாள். இதைத் தொல்காப்பியர் புரையறந் தெளிதல் என்பதில் அடக்குவர். தலைவி இவ்வாறு நடத்தலே தனக்கொத்த இல்லறம் என்று மனத்துட்கொள்வாள் என்று நச்சிர்ைகினியர் உரை கூறுவர். F 5. தலைவன் பரத்தை பீட்டுக்குச் சென்று வந்ததுபற்றி ஒருவேளை மனத்தில் வருந்துவானுயின் அப்போது தலைவி தாய்போல் பேசி அவனுடைய மனக்கவலையை மாற்றுவாள். (பொருள் - 173). 6. எல்லாவற்றிற்கும் ேம லா. க த் தலைவி தலைவன் நயக்கும் பரத்தையை ஏத்தவும் செய்வாள். 'கற்பு வழிபட்டவள் பரத்தையை ஏத்தினும் (பொருள் 238) என்பதற்கு இளம்பூரணர் கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தமைக்கு உடன்பட்டாளே யாயினும்’ என்று உரை கூறுகின்ருர். இக்கூற்றுக்களினிடையில் இரண்டு • சந்தேகங்கள் எழலாம். கணவனுக்கு மனைவி அடிமை என்று கூறினுல்,