பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிலப்பதிகாரம் - - ------------- - புகழ்ந்துகூடக் கூறுவாள் என்று தொல்காப்பியர் சொல்லும் போது, புலவி என்றும், புலவிச் சமயத்தில் தலைவன் பணிதல் என்றும் கூறுவானேன் ? தலைவி ஊடுவது தலைவனைக் கண்டிப்பதற்காகவும் கண்டித்து அவனைத் திருத்துவதற்காகவுமன்று. அடியாள் தவறு செய்தால் ஆண்டவன் திருத்துவான், ஆண்டவன் தவறு செய்தால் அடியாள் எவ்வாறு திருத்த இயலும் ? அவளுக்குரிய இயல்பு அவனே எஞ்ஞான்றும் வழிபட்டொழுகுதல் ஒன்றேயன்ருே ? (தொல். பொருள். 160). அவ்வாருயின் தலைவி ஊடுவது எதற்காக ? புலவியின் இறுதியில் வரும் கலவியின் இன்பத்தை மிகுவிப்பதற்காகவே. புலத்தவிற் புத்தேளுடு உண்டோ, கிலத்தொடு நீரியைக் தன்னு ரகத்து ’ (குறள் 133) థౌ | அதாவது நிலத்துடன் நீர் இரண்டறக் கலந்துவிடுவதுபோல் ஒன்று படக்கூடிய கணவரிடம் புலவி கொள் ளுதல்போல் இன்பம் தரக்கூடிய தெய்வலோகம் உண்டோ என்று தலைவி தோழியிடம் கூறுவதாகத் திருவள்ளுவர் கூறுகின்ருர். ஊடுதல் , மத்திற் இன்பம் என்று அவர் கூறுவதும்.

  • முயங்காக்காற் பாயும் பசலேமற்று, ஊடி

உயங்காக்கால் உப்பின்ரும் காமம் . என்று நாலடியார் கூறுவதும் இக்கருத்தையே வற்புறுத்துவ கின்றன. காதலின் பம் துய்ப்பதற்கு ஊடல் என்பது எத்துணை அவசியம் என்பதைத் திருவள்ளுவர் அதுபற்றிப் புலவி, புலவினுணுக்கம், ஊடலுவகை என்று மூன்று அதி காரங்கள் (30 குறள்கள்) வகுத் திருப்பதிலிருந்து விளங்கும். இவ்வாறு தலைவி, தலைவன் பரத்தையிடம் சென்றதற்காக ஊடுவதையும் கடிவதையும் வைத்து அவள் அவ்வாறு செய்வது அவனைக் கண்டித்துத் திருத்துவதற்காகவே என்று எண்ணலாகாது. அதுபோல் தலைவன், தலைவி ஊடும் போது அவளேப் பணிவதையும்,