பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 சிலப்பதிகாரம் _- - அருந்ததி வசிஷ்ட முனிவர் மனேவி கண்ணகிக்கு இன்னும் கலியாணம் ஆகவில்லே. அப்படியிருக்க ஊரார் அவளை அருந்த திபோன்ற கற்புடையவள் என்று புகழ்வ. தாகக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்று தோன்றவில்லை. கலியானமாகவில்லே. உண்மைதான், அவர்கள் புகழ்ந்ததன் பொருள் அவள் ஆடவர் எவரிடமும் இச்சை கொள்ளவில்லை என்பதாகும் என்று கூறில்ை, அதுவும் பொருந்துவதாயில்லே. அவள் அத்தகையன் என்ருல் அவ்வூரிலுள்ள ஏனைய மதர் அத்தகையர் அல்லரோ என்ற ஐயம் எழும். அந்த ஐயத்திற்கு இடமில்லை என்று இளங்கோ வடிகள், இந்திரவிழாவெடுத்த காதையில் அவ்வூர்ப் பெண்கள், வடமீன் கற்பின் மனேயுறை மகளிர் (229) என்று கூறும் மொழிகளே விடை அளிக்கின்றன. ஆதலால் கண்ணகி கலியான மாவதற்கு முன்பே வடமீன் ஒத்தவள் என்று கூறுவது வெறும் பொருளற்ற சொற்களேயாகும். ஆயினும் அவர் அருந்ததியைக் கற்புடையவருக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவதேன் ? அதுபற்றி அரும்பதவுரை யாசிரியரும் அடியார்க்குநல்லாரும் விளக்கவில்லை. பொதுவாக அருந்ததியைப்பற்றிப் பல கதைகள் கூறுவறுண்டு. அவற்றைவிட அருந்ததி என்னும் பெயரே அதிக விளக்கம் தருவதாக உள்ளது. அருந்ததி என்பது வடசொல். அதன் தாது ருத், அத்தாதுவின் பொருள் தடுத்தல், ஆதலால் அருந்ததி என்னும் சொல் கணவன் செய்யும் எந்தக் கரியத்தையும் தடுக்காமல் அவன் வழியே நடப்பவள் என்று பொருள்படும். இது வாசஸ்பதி நிகண்டு கூறுவது. பேராசிரியல் ஆப்தே என்பவர் தமது சமஸ்கிருத அகராதியில் அருந்ததி