பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 27 அணியும் நகைகளும் கண்ணில் தீட்டும் அஞ்சனமும் கொங்கையில் எழுதும் குங்குமமும் நெற்றியில் இடும் திலகமும் கூந்தலில் தடவும் நெய்யும் இனி எதற்காக என்று நீக்கினுள். கண்ணகி தன்னுடைய துயரத்தைத் தன் மாமனர் மாமியார் முன் கரந்தொழுகிள்ை. ஆயினும் அவர்கள் இவளுடைய பொறுமையைப் பாராட்டும்போது இவளு. டைய துயரம் இத்துணே என்று அவளுடைய பொய்ம்முறுவல் கூறும், அதனேக்கண்டு அவர்கள் வருந்தி வந்தனர். கண்ணகி தன்னுடைய வருத்தத்தை அவர்களிடந்தான் மறைத்தாள் என்பதில்லை, தன்னுடைய தோழியாகிய தேவந்தியிடங்கூடக் கூறினுளில்லே, தேவந்திதான் வாட்டருஞ்சீர்க் கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறையுண்டு ' (9 : 40-41) என்று ஊகித்தறிந்தாள். . கண்ணகி தனக்கு இவ்வளவு துன்பமும் மாதவியால் என்று அறிந்திருந்தும், மடம்படு சாயலாள் மாதவி தன்னோக் கடம்படாள் அழகும் மென்மையுமுடைய மாதவியை வெகுளாள் என்று காவற்பெண்டு என்னும் கண்ணகியின் செவிலித்தாய் கூறு. கிருள். கோவலன் மாதவியிடம் புலந்துவந்து கண்ணகியிடம், சலம்புணர் கொள்கைச் சலதி " அதாவது வஞ்சகம் பொருந்திய கொள்கையுடைய பொய்த்தி என்று மாதவியை இகழ்ந்து கூறும்போது, சாதாரணமான பெண்ணுயின் ஆமாம் இந்த வஞ்சகியினுல்தானே இத்தனைநாள் நான் வாழ்விழந்தேன் என்று மாதவியைத் திட்டுவாள். ஆணுல் கண்ணகியோ அவ்வாறு சொல்லிக் கணவனுக்குத் துன்பம் தர விரும்பாது நகைமுகமேகாட்டி நின் ருள். கோவலன், மதுரைமா நகர்க்குச் சென்று பொருள் தேட விழைந்தேன்,