பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சிலப்பதிகாரம் என்ைேடு வருவாய் என்று கூறின்ை. அதைக் கேட்டதும் ஆகட்டும் என்று அவனுடன் சென்ருள். ஆகவே கோவலன் அழிவந்த செய்யினும் அவனைக் கைப்பிடித்த அன்று அவனிடம் கொண்ட அன்பில் எவ்வித மாற்றமுமின்றி வாழ்ந்தவளாதலால் (சிலப். 16 : 82) அவன் அழைத்ததும் அணுவளவும் தயங்கினுளில்லை. கோவலன் திருமணம் செய்த காலத்தில் அங்குக். குழுமியிருந்த மங்கையர் காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் திதறு கென அதாவது கண்ணகி கோவலனேப் பிரியாமலும் கோவலன் கண்ணகியைக் கைவிடாமலும் இருவரன்பும் ஒரன்பாக வாழக்கடவர் என்று வாழ்த்தினர். கோவலன் கண்ணகி. யைக் கைவிட்டு மாதவியிடம் தங்கின்ை. ஆணுல் கண்ணகி அங்கி சான் ருகக்கொண்ட அன்பை அழியாமல் பாதுகாத். தாள்.

  • அன்பு மாறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டபோதும் மாருது நிற்கும் அன்பே உண்மையான அன்பு என்று ஷேக்ஸ்பியர் கூறும் அன்பின் இலக்கணம் கண்ணகியின் அன்புக்கு முற்றிலும் பொருந்தும்.

உடம்பும் உயிரும் வாடியக்காலும் என்னுற்றனகொல் இவை எனின் அல்லது ' அதாவது தன் உடம்பும் உயிரும் தேய்ந்து கூட்டமின்றி இருந்தகாலத்திலும் இவை என்ன வருத்தமுற்றனவோ என்று தனக்கு வருத்தமில்லாததுபோல (தொல். பொருள். 203) நடந்துவந்தாள். இவ்வாறு நடப்பதே இன் துனே மகளிர்க்கு இன்றி. யமையாக் கற்புக் கடம் என்று உணர்ந்து சான்ருேர் வகுத்த கற்பின் இலக்கணத்துக்குக் கடுகளவும் பிறழாது