பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 98) நடந்துவந்தமையால் கற்புத்தெய்வம் என்று கவுந்தியடி களால் புகழப்பெற்ருள், | திருவள்ளுவர் கற்பின் இலக்கணத்தை 1. மனைவி கணவனைத் தெய்வமாக மதித்து அவனுக்கு அடிமை பூண்டு ஒழுகுதல் என்றும், 2. கணவனுக்கு மட்டுமே தன்னுடைய உடலைத் துய்க்கக் கொடுத்தல் என்றும் இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். தொல்காப்பியர் இரண்டாவது பகுதியை விரித்துரையாமல் முதலாவது பகுதியை விரித்துரைத்தார். அதுபோலவே இளங்கோவடிகளும் இரண்டாம் பகுதியைக் கோவலன் மாதவி வீடு சென்றதும் கண்ணகி தன் இனக் கோலம் செய்துகொள்ளாதிருந்தாள் என்று குறிப்பாக உணர்த்திவிட்டு, முதலாவது பகுதியையே பல. விதமாக விளக்குகின்ருர். தவிரவும் கண்ணகி இரண்டாவது பகுதியில் சிறந்தவள், அதுபோல் இருங்கள் என்று இக்காலத்துப் பெண்களுக்கு எடுத்துக்கூற வேண்டியதில்லை. எக்காலத்திலும் பெண்கள் இயற்கையாகவே இந்தப் பகுதியில் வழுவி" நடத்தல் அரிதே. ஆதலால் முதலாவது பகுதியை வைத்தே அந்தக் காலமுதல் அறிஞர்கள் கண்ணகி கற்பிற்கோர் இணையற்ற எடுத்துக்காட்டு என்றும் அவள் போல் பெண்கள் அனை. வரும் இருக்கவேண்டும் என்றும் கூறியும் எழுதியும் பிரசங் கித்தும் வருகிருர்கள். கண்ணகியின் சிறப்புநோக்கி அவளே ஒரு பேராசிரியர் கண்ணகி என்று கூருமல் கண்ணகியார் என்று போற்றுகின்ருர். ஒரு பெண் கண்ணகிபோன்ற கற்புடையவளாய் இருக்கவேண்டுமாயின் அவள், 1. கணவனே ஆண்ட வகுகக் கருதி அவனுக்கு அடிமை பூண்டு ஒழுகுதல்வேண்டும். கணவனே தெய்வம் என்று கொண்டு, வேறு.தெய்வம் தொழா திருத்தல் வேண்டும்.