பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சிலப்பதிகாரம் 2. கணவனைத் தெய்வமாகக் கொள்வதால் அவன் எத்துணைத் தீயவளுக ஒழுகினலும், அவன்ேத் தடுக்கவும் கூடாது. கண்டிக்கவும் கூடாது. அருந்ததி என்னும் சொல்லின் பொருளே தடுக்காதவள் என்பதே. அதுமட்டுமன்று; அவன் தன் தீய ஒழுக்கத்துக்கு மனைவியின் உதவியை வேண்டினுல் அவள் அதையும் அளிக்கக் கடமைப்பட்டவளாவள் சிவபெருமான் தொண்டர் வேடத்துடன் வந்து இயற். பகை நாயனரிடம் அவருடைய மனைவியைத் தருமாறு கேட்டார். சிறுத்தொண்டநாயனுரிடம் அவருடைய பிள்ளை. யைக் கறி சமைத்துத் தருமாறு கேட்டார். இருவரும் இத் தொண்டர் கேட்பது அறநெறிக்கு ஒவ்வாததாயிற்றே என்று எண்ணவுமில்லை, தயங்கவுமில்லை. தொண்டர் கேட்டதே பெரும்பேருக எண்ணி அவர் கேட்டதைத் தர விரைந்தனர். அதுபோல் கண்ணகியும் கோவலன்வந்து தன்னுடைய காதற்பரத்தையுடனும் வம்பப் பரத்தருடனும் காலங் கழிப்பதற்காக அவளுடைய நகைகளைக் கேட்டபோது அவள், இவன் கேட்பது தீய ஒழுக்கத்துக்காகவன்ருே என்று எண்ணுமல், - இன்று நீரெனக் கருள் செய்தது இதுவேல் என்னுயிர்க் கொரு நாதர்ே உரைத்தது ஒன்றை நான்செயும் அத்தனே யல்லால் உரிமை வேறுள தோஎனக் கென்று ' (இயற்கை: பெரியபுராணம்) அவன் கேட்கும் நகையை மிகுந்த மனமகிழ்ச்சியுடன் கழற்றிக் கொடுத்துவந்தாள். கண்ணகிபோன்ற கற்புடையவ ளாக ஆக விரும்பும் பெண்கள் இவ்வாறு நடக்கத் தயங்க லாகாது. 3. கணவன் தனக்குச் செய்யும் துன்பங்களேயெல்லாம் பொறுத்துக் கொள்ளவேண்டும், மனவேதனையை மறைத்துக்கொள்ள வேண்டும். அவனிடத்தில் தனக்குள்ள