பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சிலப்பதிகாரம் - _ ____ அதுவே ஆணும் பெண்ணும் சம மதிப்புடைய ஆன்மாக்களே என்று நம்புவோருடைய கடமையாகும். இளங்கோவடிகள் கண்ணகியின் கற்பின் சிறப்பின் இரண்டாவது பகுதியாகக் கூறுவது அவள் கோவலன் பரத்தமையைப் பொறுத்துக்கொண்டதாகும். அதுவே மிக முக்கியமானது என்று கானல்வரியிலும், கண்ணகி பிரலாபத்திலும் கூறுவதை முன்னரே கண்டோம். உற்றநோய் கோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை

  • fo i. H - i. அற்றே தவத்திற் குரு.

ஆதலின் கண்ணகியின் பொறுமை பெருந்தவமாகும் என்று சிலர் கூறுகின்றனர். தவத்திற்கு உரு பொறுமை என்று வள்ளுவர் கூறுவது உண்மைதான், ஆளுல் கண்ணகியின் பொறுமை தவமாகாது. ஒருவர்க்குத் துன்பம் ஐந்துவிதமாக உண்டாகலாம். அவற்றில் எந்தவிதத் துன்பத்தைப் பொறுப்பது தவம் என்று ஆராய விரும்புகின்றேன். 1. நான் பிழை செய்யவில்லை, பிறரும் எனக்குத் துன்பம் செய்யவில்லை, ஆயினும் எனக்குத் தற்செயலாகத் துன்பம் ஏற்படுகின்றது. சாலேயில் செல்லும்போது திடீரென்று மரம் சாய்ந்துவிடுகின்றது, அது தற்செயலாக உண்டாகும் துன்பம், அதைத் தவிர்க்க முடியாது, அதை அனுபவிக்கவேண்டும், அதைப் பொறுப்பது தவமாகாது. 2. நான் பிழை செய்கின்றேன், அதற்காகத் தண்டனே பெறுகின்றேன். அதுவும் விலக்க முடியாதது: பொறுக்க வேண்டியதே. அந்தப் பொறுமையும் தவமாகாது. 3. நான் பிழை செய்யவில்லை. பிறர் துன்பம் செய்கின்றனர். அதை நான் எதிர்க்காமல் சகித்தால் அந்தப் பொறுமை தவமாகாது; தவருன கருத்துடைமை அல்லது அச்சமுடைமையாகும்.