பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 37 - அதாவது இல்லறம் என்னும் வண்டி ஒழுங்காகச் செல்ல வேண்டுமாயின், கணவன் மனைவி என்ற இரு மாடுகளும் ஒத்துழைத்தல் அவசியம் என்று கூறுகின்ருர். இருவரும் மாடுகள் என்றதால் இருவரிடையே ஏற்றத்தாழ்வு கிடை. யாது, இருவரும் சமநிலையுடையவர்கள் என்பது தெளிவாகும். இந்தச் சம நிலையை இந்திய அரசியற்சட்டம் பெண்களுக்கு அளிக்கின்றது. எவராயினும் தவறு செய்தால் அதனை எதிர்ப்பது என்னும் கடமை பெண்களுக்கும் உண்டு. அஹிம்சா நெறியில் எதிர்ப்பதற்காக சத்தியாக்கிரக வழியை மகாத்மா காந்தியடிகள் வகுத்துள்ளார். இந்த இரண்டு உண்மைகளையும் பெண்கள் மனத்தில் ஆழ்ந்து பதியுமாறு செய்தல் அறிஞர் கடமையாகும். கோவலனுடைய பரத்தமையைச் சகித்துக்கொண்டு அவனைக் கண்டியாமல் உதவி செய்வதாகிய கண்ணகியின் ஆறிய கற்பை இதுவரை பார்த்தோம். அவ்வாறு தீமை. யைத் தடுக்காமல் உதவி செய்யும் கற்பு அறவே தீது என்ற முடிவுக்கு வந்தோம். இனிக் கண்ணகியின் சீறிய கற்பைப் பார்ப்போம். கோவலன் கள்வன் என்று குற்றம் சாட்டப்பட்டுக் கொ8ல யுண்டான் என்று கேட்டதும் கண்ணகி. பொங்கி எழுந்தாள், விழுந்தாள், பொழிகதிர்த் திங்கள் முகிலோடும் சேணிலங் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள், தன் கேள்வனே எங்களு அ என்ன இனேந்தேங்கி மாழ்கிளுள் . அவள் கணவனே இ ழ ந் த துக்கத்தையேனும் பொறுக்க முடியும், ஆளுல் கணவனேக் கள்வன் என்று குற்றஞ் சாட்டியதை எப்படிப் பொறுப்பாள் ? என் கணவனுடைய நன்மதிப்பிற்கு ஏற்பட்ட இந்தக் கறையைக் கழுவுவேன் என்று சீறி எழுந்தாள். இறைவன்