பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணகியின் கற்பு 39 என்று கூறவேண்டுமாயின் அவனுடைய பரத்தமையின் இழிவு சொல்லுந்தரமன்று. அத்தகைய கடைகழி காமுகஞயிருந்தமை அவனுடைய பெயருக்குப் பெரியதோர் இழுக்காகாதோ ? அதைத் துடைக்கக் கண்ணகி ஆத்திரப்பட்டுச் சீறி எழாதிருந்ததேன்? சீறுவதற்குப் பதிலாக ஆறியிருந்ததேன்? ஆறியிருத். தலே கற்பு என்று அல்லும் பகலும் அறிஞர்கள் அக்காலத்தில் அறைந்துவந்ததே காரணம். அதனே இக்காலத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆதலால் அதனை யாரும் கூரு திருத்தலே நலம். அங்ங்ணமிருக்க அறிஞர்கள் ஆறிய கற்பு என்று புகழ்ந்து கூறுவது அறிவுக்கும் அறத்துக்கும் ஒவ்வாது என்று பணிவுடன் கூறுகின்றேன். கண்ணகி கோவலன் கள்வன் அல்லன் என்று காட்டி அவனுடைய பெயரைக் காக்கச் சீறி எழுந்தது சரியே, ஆளுல் தவறுசெய்த அரசன் தானுகவே தவறு செய்துவிட்டேன் என்று உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவனுடைய உள்ளத்தில் நிறையவே, அதன் காரணமாக அடியற்ற மரமாக வீழ்ந்தான். அவனுடைய கோடிய கோலும் நீடிய கோலாக ஆயிற்று. ஆல்ை அவனுடைய ஆட்சியின் கீழ் வாழ்ந்த அந்த மதுரைமா நகரத்து மக்கள் அவன் இத்தகைய அநீதி செய்து விட்டான் என்பதைக்கூட அறியார்கள், அங்ங்ணமிருக்கக் கண்ணகி மன்னவன் செய்த பிழைக்காக மக்களை மடியச் செய்தல் என்பது எந்தவிதத்திலும் அறமாகாது. ஆதலால் கண்ணகி அறத்தைக் காக்க ஆவிநீத்த அரசனேப் போற்றவே கடமைப்பட்டவள், அங்ங்னம் செய். யாமல் யாதொரு தவறும் செய்யாத ஊராரை எரித்தது தவருகும். ஆகவே கண்ணகி சீறவேண்டிய வேளையில் சீருமல் ஆறிள்ை. சீறிய வேளையில் அளவுகடந்து அறத்துக்கு