பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 சிலப்பதிகாரம் சூன் முதிர் கொண் மூப் பெயல் வளஞ் சுரப்பக் குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளம் எதிரக் கயவாய் தெரிக்கும் . அதாவது குடக மலையில் மழை பெய்வதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதும் தப்பா. ஆதலால் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து உறையூர் போகும் வரையிலும் வயலும் சோலேயும் அல்லது யாங்கணும் அயல்படக் கிடந்த நெறியாங் கில்லே " என்று கவுந்தியடிகள் கோவலனிடம் கூறுகின்றர். போகும் வழியெல்லாம் வள்ளிக்கிழங்கு நிலத்தைப் பிளப்பதுபோல் பெரியனவாயிருக்கும். பலாப் பழங்கள் தேனுெழுகத் தொங்கும். செந்நெற் கதிர்கள் கவரித் தொங்கல்போல் வளைந்து கிடக்கும், அங்கு கரும்பல்லது காடில்லே, கரும்பிற் தொடுத்த பெருக்தேன் சிதைந்து சுரும்புசூழ் பொய்கைத் துாரீர் கலக்கும் கரும்பிலே பெருந்தேன் அடைகள் காணவேண்டுமாயின் கரும்பு எத்தனைப் பருமனுயிருக்கும் என்று அறிந்துகொள்ள லாம். இவ்வாறு சோழநாட்டில் பயிர்த்தொழில் சிறந்திருந்ததால் இளங்கோவடிகள் அந்நாட்டு விவசாயிகளேப் பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர், இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும் உழவிடை விளேப்போர் . என்று சிறப்பிக்கின்ருர். பாண்டி நாட்டை வளப்படுத்திய வைகையாற்றை இளங்கோவடிகள் • உலகுபுரக் துாட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் தாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி