பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 43 அதாவது உலகத்திலுள்ள மக்களுக்குப் பல பொருள்களே. யும் விளைவித்துத்தரும் உயர்குணத்தவள். சேர்ந்தார்க்கு வரையின்றி இன்பமளித்தலின் திருமகளே யொத்தவள். பருவம் பொய்யாமல் நீர் தருவதால் பாண்டியர் குலக்கொடியாயிருப்பவள், இக்காரணங்களால் புலவர்களால் ஏற்றப்படுபவள் என்று போற்றுகின்ருர், வையை நதி இக்காலத்தில் வறண்ட ஆருக இருப்பதுபோல் அக்காலத்தில் இருக்கவில்லை. ஆடிக்கோடை. யிலுங்கூட பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை : உடையதாயிருந்தது. அத்துனே ஆழமாக நீர் ஓடிக்கொண் டிருந்தது. அந்த நீர் ஆண்டு முழுவதும் இடையருது ஒழுகியது என்பதை இளங்கோவடிகள் நீடுநீர்வையை (துன்பமாலை, 4) என்று குறிப்பிடுகின் ருர். ஆதலால் நாடெங்கும் புள்ளனரி கழனியும் பொழிலும் பொருக்தி வெள்ளநீர்ப் பண்ணே யும் விரிநீர் ஏரியும் காய்க்குலேத் தெங்கும் வாழையும் கமுகும் . நிரம்பியிருந்தன. இவ்வாறு பாண்டிய நாடு ப்ொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் வையைப் பேரியாறு வளஞ்சுரங் துரட்டலும் . உடையதாயிருந்தது. இவ்வாறு சோழநாட்டிலும் பாண்டி நாட்டிலும் நீர்வளம் நில வளம் நிறைந்து பயிர்த்தொழில் சிறந்து நடந்து வந்தபடியால் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரைமா நகரத்திலும் நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர் அம்பண அளவையர் எங்கணுக் திரிதரக் கூலங் குவித்த கல விதிகள் .