பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சிலப்பதிகாரம் கல்லில் உறைத்தால் தங்கமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. அதல்ை அவர் அதற்கென்று உள்ள ஒரு தனிக்கல் வைத்திருப்பார். அதைக் கட்டளைக்கல் என்பர். அதுவே தங்கமா இல்லேயா என்பதை ஐயமறக் காட்டும். அதுபோல் ஒருவனுடைய அல்லது ஒரு நாட்டினுடைய சிறப்பை அறிவதற்கும் ஒரு கல் உண்டு. பேராசிரியரும் ஒரு கல் தருகிருர். திருவள்ளுவரும் ஒரு கல் தருகிரு.ர். பேராசிரியர் தருவது செல்வம் என்பது, அது வெறும் சாதாரணக்கல். அதைக்கொண்டு அறிய முடியாது. திருவள்ளுவர் தருவதே கட்டளைக்கல், அதுவே விஷயத்தை விளக்கும். பெருமைக்கும் ஏனே ச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளேக் கல். ஒருவனுடைய பெருமையையும் சிறுமையையும் -ԵեւIனுடைய செயலே - ஒழுக்கத்தை ைவ த் ேத அளந்தறிய வேண்டும் என்று கூறுகிரு.ர். அதனுலன்ருே கிறிஸ்துவ வேதமானது ஒரு சமூகத்தின் உயர்வைக் காட்டுவது அதன் ஒழுக்கமே " என்று கூறுகின்றது. செல்வமே ஒரு நாட்டின் சிறப்பைக் காட்டுமாயின் உலகத்தை அழியாமல் பாதுகாப்பதும் செல்வமே என்று கூறத்தகும். ஆணுல் இரண்டாயிரம் ஆண்டு. களுக்குமுன் தமிழ்நாட்டிலிருந்த இளம்பெருவழுதி என்னும் அரசனிடம் உலகம் நிலைத்து நிற்பது எதல்ை ? என்று கேட்டபோது செல்வம் என்று கூருமல் தமக்கென முயலா கோன்ருள் பிறர்க்கென முயலுகர் உண்மை யானே (புறம்-182) என்றே கூறினர். ஆங்கில நாட்டில் ரஸ்கின் என்ற ஒரு பெரியார் இருந்தார். அவர் கடையவருக்கும் கடைத்தேற்றம் (Unto the Last) என்ற பெயருடைய ஒரு சிறு நூல் எழுதினர்.