பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 1962 - ஆம் ஆண்டின் இறுதியில் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராயிருந்த உயர்திரு. வி. சுப்பிர மணியம் அவர்கள். நான் அடுத்த ஆண்டில் அங்குவந்து சொர்னம்மாள் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தவேண்டு மென்று அழைத்தார்கள். அவ்வண்ணமே நான் 1963-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சிலப்பதிகாரம் பற்றி மூன்று சொற் பொழிவுகள் செய்தேன். இந்தச் சொற்பொழிவுகளுக்குப் பல்கலைக்கழகத்தார் இப்போது இந்த நூல் உருவம் தந்துள்ளனர். அப்பொழுது அங்கு பேராசிரியராய் இருந்தவரும் இப்பொழுது மது ைர ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரா யிருப்பவருமான உயர்திரு. தெ. பொ. மீனுட்சிசுந்தரர்ை அவர்கள் முதல் நாளிலும், பேராசிரியர் லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இரண்ட்ாம் நா வரி லும், பேராசிரியர் கோ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் மூன்ரும் நாளிலும் தலைமை தாங்கினர்கள். பேராசிரியர் கோ. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தமது முடிவுரையில், பாரதியார் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடினர். ஆல்ை இவர்கள் மூன்று நாட்களும் பேசியதைக் கேட்ட பிறகு, நெஞ்சைக் கிள்ளும் சிலப்பதிகாரம் என்று கூறலாமோ எனத் தோ ன் று கி ற து. இவர்கள் கூறிய கருத்துக்களெல்லாம் புரட்சிகரமானவை. இதுவரை யாரும் சிலப்பதிகாரத்தில் குற்றங் குறைகள் இருப்பதாக எண்ணியதில்லை. எண்ணினுலும் வெளியில் சொல்லத் துணிந்ததில்லை. இவர்கள் தமக்கு எது உண்மை என்று தோன்றுகிறதோ அதை