பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலப்பதிகாரம் - - ஆயினும் நாளடைவில் இயற்கைச் சக்திகளைப்பற்றிச் சிறிது சிறிதாக அறிந்து பயன்படுத்தத் தெரிந்து வந்தான். பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் பயிர் செய்யவும் ஆடை நெய்யவும் வீடு கட்டவும் அறிந்தான். காட்டு வாழ்வு இயற்கைக்கு அடிமையாயிருந்ததைக் காட்டும். வீட்டு வாழ்வு இயற்கையை அடக்கி ஆளத் தெரிந்துகொண்டதைக் காட்டும். அதல்ை என்று வீட்டில் வாழத் தொடங்கினனே, அன்று முதலே நாகரிகத் தொடக். கம் என்று மானிடவியலார் கூறுவர். நாகரிகம் என்னும் சொல் நகரம் என்பதிலிருந்து வந்த, தாயிற்றே, அப்படியால்ை நகரம் அமைத்து வாழக் கற்றுக் கொண்ட காலம் அல்லவ நாகரிகத்தின் ஆரம்பக் காலம் என்று கேட்கக்கூடும். நகரத்திலிருந்தே நாகரிகம் என்னும் சொல் பிறந்தது. ஆனல் நகரம் என்பது ஆதியில் வீட்டையே குறித்தது. (பட்டின : 20) இவ்வாறு மனிதன் இயற்கைச் சக்திகளை அறியவும் பயன்படுத்தவும் கற்றுக்கொண்டதன் பயனுகத் தனக்குப் பல்லாயிரக் கணக்கான சுகபோகப் பொருள்களே உண். டாக்கிக்கொண்டான். இந்த முறையில் பார்த்தால் காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரைமா நகரத்திலும் வாழ்ந்த மக்கள் இறும்பூது அடையக்கூடிய அளவு நாகரிகம் மிகுந்தவர்களாகவே இருந்தார்கள். ஆல்ை நாகரிகம் என்பது இரண்டு வகைப்படும். இயற்கைச் சக்திகள் மனிதனுக்குப் புறத்தே உள்ளன. போலவே அகத்தேயும் உள்ளன. புறத்திலுள்ள சக்திகளைப் பயன்படுத்துவது புறநாகரிகம், அதைச் சடநாகரிகம் என்று அறிஞர் கூறுவர். அகத்திலுள்ள சக்திகளை அடக்கி ஆளுவது அகநாகரிகம், அதை ஆன்ம நாகரிகம் என்று அறிஞர் கூறுவர். N செல்வத்திலும் ஒழுக்கமே சிறந்ததாவதுபோல் சட. நாகரிகத்திலும் ஆன்ம நாகரிகமே சிறந்ததாகும். செல்வம்