பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிலப்பதிகாரம் பொன்னே ஒரு நாளேக்குப் பரிசமாகப் பெறுகை நூல்வழக்கு. ஆதலின் இவளுக்கும் அதையே விதிக்கின்றேன் என்று கூறுவாயிைன் அதனினும் இழிவான செயல் வேறுண்டோ? அரசன் கலைகளே வளர்க்கும் முறை இதுதானே ? ஆடினுள், பாடினுள், இவளுடைய பாடலும் ஆடலும் இத்துணைப் பொன் பெறத் தகுந்தன என்று கூருமல் இவளுடைய அழ. கான உடல் இத்துணைப் பொன் விலையாக விற்கத் தகுந்தது என்று கூறுவது அரசியல் தருமம் ஆகுமோ? அரங்கேற்றம் நடந்தது ஆடல் பாடலின் தரத்தை நிச்சயிப்பதற்காகவா, அன்றி ஆடவும் பாட வும் செய்கின்றவளுடைய தசையின் தரத்தை நிச்சயிப்பதற்காகவா ? அ ர ச ேன காமத்தின் விலையை நிச்சயிப்பானுயின், அவனுடைய குடிகளுடைய ஒழுக்கத்தை என்னவென்று கூற இயலும் ? மாதவியின் ஆடலேயும் பாடலையும் அழகையும் கண்டு வியந்து மன்னன் அவளுக்கு நாட்பரிசம் ஆயிரத்தெட்டுக் கழஞ்சுபொன் என்று தீர்மானித்தான். அதனுடன் அவ. ளுக்கு ஒரு பச்சைமாலேயும் அளித்தான். அந்த மாஅலயை மாதவியின் தாய் சித்திராபதி ஒரு வேலைக்காரியிடம் கொடுத்து இதற்கு ஆயிரத்தெட்டுக் கழஞ்சுபொன் தருபவனை அழைத்துவா என்று கூறி அனுப்பிள்ை. ஊரில் காருகர்தெரு, கூலத்தெரு என்று பல தெருக்கள் இருந்தன. காருகர் தெருவில் ஆடைகள் விற்பர். கூலத்தெருவில் கூலங்களை விற்பர். அப்படியாயின் சித்திராபதி தந்த பச்சைமாலையை எந்தத் தெருவில் விற்பது ? பரத்தையர் உடலை விற்கும் அந்திக் கடைத் தெருவிலேயே. அங்குதான் போய்நின் ருள் வேலைக்காரி. கோவலன் பொன் கொடுத்தான், அவளுடன் மாதவி வீடு சென்ருன். அந்தத் தெருவை இளங்கோவடிகள் நகர நம்பியர் திரிதரு மறுகு என்று கூறுகின் ருர். ஒவ்வொரு மொழி. யிலும் சில சொற்கள் தாங்கள் குறிக்கும் நல்ல பொருளை நாளடைவில் இழந்து தீயபொருளைக் குறிக்க நேர்வதுண்டு. தமிழ்மொழியில் மக்களில் உயர்ந்தோனேக் குறிப்பதற்காகப்