பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 சிலப்பதிகாரம் _ மாநகரத்துக்கு வெளியேயிருந்த பரத்தையர் சேரியை மணங்கமழ்சேரி ' (மதுரை 329) என்று வருணிப்பதை ஒக்கும். இப்புலவர் பெருமக்கள் புகழ்வதுபோல் இகழ். கின்றனரோ என்று எண்ணுகிறேன். இக்காலத்தில் சிறிய ஊர்களிலும் திருடர்கள் வந்து களவு செய்யாதவாறு இரவில் போலீஸ்காரர்கள் தெருக்களில் ரோந்து சுற்றிவருவது வழக்கம். சென்னை நகரத்தில் நா8லந்து தெருக்காரர்கள் சேர்ந்து தங்கள் வீடுகளைத் திருடர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு குர்க்கா என்னும் நேப்பாள தேசத்து வீரரைத் தங்கள் காவலராக நியமித்து வருகின்றனர். இரவில் நடுச்சாமத்தில்தான் பெரும்பாலும் திருடர்கள் வந்து தங்கள் காரியங்களைச் செய்வர். அதனுல் குர்க்கா என்பர் நாடோறும் அந்தச் சமயத்தில் தெருக்களில் சுற்றிவருவார். அவர் தம் கையிலுள்ள தடியைத் தரையில் தட்டிக்கொண்டே நடப்பர். அந்த சப்தத்தைக் கேட்டு வீட்டிலுள்ள மக்கள் விழிப்பாய் இருந்துகொள்வர். ஆல்ை காவிரிப்பூம்பட்டினத்தில் போலீஸ்காரர் ரோந்து சுற்றவுமில்லை. தெருக்காரர்கள் குர்க்காவை நியமிக்கவுமில்லை. கடவுள் நியமித்த ஒரு காவலன் இருந்தான். அவன் நடு நிசியில் மட்டுமன்று இரவு முழுவதும் மாலை முதல் இரவுத் தலைப்பெயரும் வைகறை காறும் தெருக்கள் எல்லாவற்றி. லும் திரிந்துகொண்டிருப்பான். அவன் கையில் ஒரு வில்லும் அம்பும் வைத்திருப்பான். அவன்தான் மன்மதன், அவன் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள்மீது மலர் அம்பு எய்வான். அதனுல் மக்கள் அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சார்’ இரவு முற்றிலும் அரையிருளிலும், ஒர் யாமத்திலும், அரை யாமத்திலும் ஒரு கணப்பொழுதும் துஞ்சார். ஆதலால். நகரம் காவல் கனிசிறந்தது . இதிலிருந்து அக்காலத்து மக்கள் கங்குல் முழுவதும் காமத் தில் ஆழ்ந்திருந்தார்கள் என்பது தெளிவாம்.