பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VI அஞ்சாமல் கூறும் இயல்பினர். இவர்கள் கருத்துக்களை காம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்கொள்ளா விட்டாலும், அவை ஆராயத் தக்கன. இவர்கள் நம்மிடம் வேண்டுவதும் அதுவே என்று கூறினர்கள். 1960-ஆம் ஆண்டில் நான் மதுரையில் நடக்கும் ' தமிழ் நாடு ' என்னும் பத்திரிகையில் கண்ணகி செய்த தவறு." என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன்; அதை மறுத்துப் பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம் அவர்கள் கண்ணகி செய்தது தவரு ? என்று எழுதினர்கள். நான் அதற்கு மறுப்பாகக் 'கண்ணகி செய்தது தவறே என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் அதை வெளியிட மறுத்து எனக்கு எழுதிய கடிதத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாகப் போற்றிவரும் ஒரு காவியத்தில் இப் பொழுது குற்றங்குறைகள் காண்பதா? என்று கூறினர்கள். அந்தக் கடிதத்திற்கு நான் எழுதிய பதிலில் 'இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் ஒரு காவியம் இந்த அற்பத் திருகூடசுந்தரத்தால் வீழ்ந்து விடுமானுல் வீழ்ந்துவிடத் தக்கதே' என எழுதினேன். இதுவரை என் கட்டுரை பிரசுரிக்கப்படவில்லை. இத்தகைய மனப்பான்மையை எண்ணித்தான் பாரதியார் " ஏலும் மனிதர் அறிவை அடர்க்கும் இருள்கள் அழிகவே எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே '’ | என்று பாடியுள்ளார். ஆதலால் அறிவை மட்டும் துணையாகக்கொண்டு, அறி. வுக்கு முரணுன உணர்ச்சிகளை அறவே அகற்றிவிட்டு, என் கருத்துக்களை ஆராயவேண்டுமென்று இந்த நூலேப் படிக்கும் அறிஞர்களே வேண்டிக்கொள்கிறேன். G56ঠা &ঠা, பொ. திருகூடசுந்தரம் 29–5-67.