பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சிலப்பதிகாரம் தன்னிடமுள்ள குறுமுயலாகிய களங்கத்தைவிட்டு இள. நங்கை வேடங்கொண்டு இவ்வீதியில் வந்துளதோ ? மீனக்கொடி யுடையோனுகிய மன்மதன் சிவபெருமா. னுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பாலிழந்த தன்னுடைய உடலை மீண்டும் பெறுவதற்காகத் திங்களிடமுள்ள -9I(ԼԲ:5கலைநீரை மாந்த வளர்ந்த வானவல்லி இப்போது வானின்றிழிந்து காமவல்லியாகத் திரிகின் ருளோ ? திருமகள் வாழும் கமலமலரே இப்போது இலவமலரை இதழாகவும், முல்லே முகையை முறுவலாகவும், கருங்குவளே. யைக் கண்ணுகவும், குமிழமலரை நாசியாகவும் அமைத்துக் கொண்டு இந்நகரில் வந்து திருமகளைத் தேடித் திரிகின்றதோ ? கூற்றுவன் என்னும் கொடியவன் செங்கோல் மன்ன. னுக்கஞ்சி ஆண்மை வடிவத்தை நீக்கிவிட்டு நகை முகமும் இசைச் சொல்லுமுடைய பெண் போல் வேடங்கொண்டு ஆண்களே வாட்ட வந்துளனே ? இவ்வாறு இளைஞர் கூறும் புகழ்மொழிகளைக் கேட்டவுடன் ஏந்திழையார் அவர்களுக்கு அருள் செய்கின்றனர். அப்போது மகளிர் மார்பிலுள்ள சந்தனம் முதலியவை மைந்தர் மார்பில் படிகின்றன. அதனுடன் வீடு சென்ருல் அங்குள்ள மனேவியர் வெகுள்வரே என்று அஞ்சி ஒவ்வோர் இளைஞனும் ஒரு விருந்தினனைக் கூட்டிக்கொண்டு செல்லு கின்றன். விருந்து முன் வெகுள்தல் அழகன்று என்று எண்ணி மனைவியர் ஊடாதிருந்துவிடுகின்றனர். இந்த அற்புதக் காட்சி நிகழும் வீதிகள் எந்த வீதிகள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை. அடியார்க்கு. நல்லாரும் கூறவில்லை. ஆனல் பரத்தையர் செயலாக இருப்பதால் பரத்தையர் வீதிகளாகத்தான் இருக்கவேண்டும், அப்படியாயின் அடியார்க்குநல்லார் பரத்தையர் வீதி வருணனை என்று கூருமல் வீதி வருணனை என்றுமட்டும் கூறக் காரணம் யாது ? தாமரை என்று கூருமல் பூ என்று