பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 65 - - - கறில்ை போதும், அது தாமரையையே குறிக்கும். பூவினுக் கருங்கலம் பொங்குதாமரை ஆதலின் என்பர் புலவர். அதுபோல் பரத்தையர் வீதி என்று கூருமல் வீதி என்று கூறினல் போதும், அது பரத்தையர் வீதியையே குறிக்கும். வீதியினுக் கருங்கலம் வேசியர் வாழிடம் என்று கருதினுள் போலும். அல்லது விழாக்காலமாதலால் எல்லா வீதிகளிலுமே காமன் சேனையினர் கருமுகரைத் தேடிக் கழுகுகள்போல் அலேந்தனரோ, அப்னிடியால்ை அதைவிடக் கேவலமான காரியம் வேறு எதுவும் இருக்க முடியாது. நகர் முழுவதும் நம்பியர் காதற் கவிதைகள் முழங்கியிருக்கும். இவர்கள் அகத்துறையில் ஆழ்ந்த புலமையுடையவர் போலும். இவர்களே மாங்குடிமருதனுர் கல்லா மாந்தர் என்பர். அச்சொற்ருெடர்க்கு நச்சினர்க்கினியர் காமநுகர்ச்சியினை யன்றி வேருென்றையுங் கல்லாத இளைஞர் என்று உரை கூறுகின்ருர், நடுத்தெருவில் மங்கையர் ஊடுவதும் மைந்தர் ஊடல் தீர்ப்பதும் மகளிர் உணர்வதும் அருள்வதும் எந்த நாட்டிலும் காணமுடியாத இறும்பூதாக இருக்கின்றது. நானுத் தாழ் வீழ்த்த கதவை உடைக்கக்கூடிய ஆற்றல் காமக்கணிச்சிக்கு உண்டு என்று வள்ளுவர் கூறுவர். ஆனல் அது நடுத்தெருவில் அச்செயலை நிகழ்த்தும் என்பதைக் காவிரிப்பூம்பட்டினத்திலேயே காண இயலும், மகளிர் மார்பிலுள்ள சந்தனம் மைந்தர் மார்பில் வந்து சேரும் என்று கூறுகிருரே, அது எங்ங்னம் ? இக்காலத்தில் பெண்கள் மார்பில் பாடி என்றும், ஜாக்கட் என்றும் அணி. கின்றனர். அவை அந்தக் காலத்தில் இல்லே, ஆயினும் அக்காலத்துப் பெண்கள் மார்பில் எதுவும் அணியாமல் வெளியில் வருவதில்லை. அவர்கள் மார்பில் கச்சணிவர். கழுத்தில் இக்காலத்துப் பஞ்சாப் பெண்கள் அணிவதுபோல் உத்தரீயம் அணிவர், இளங்கோவடிகள் வேட்டுவ வரியில் கொற்றவையை வர்ணிக்கும்போது