பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சிலப்பதிகாரம் துணேயெயிற்று உரகக் கச்சுடை முலேச்சி அதாவது நஞ்சு ஊரும் துணைப்பல் உடைய பாம்பைக் கச்சாக அணிந்த மார்பினளே என்றும் கரியினுரிவை போர்த்து அணங்காகிய அரியின் உரிவை மேகலே யாட்டி : அதாவது சிங்கத்தின் தோலே மேகலையாகவும் யானையின் தோலே ஏகாசமாகவும் அணிந்தவளே என்றும் கூறுகின்ருர். ஏகாசம் என்பது உத்தரீயம் என்னும் மேலாடையாகும், பெண்கள் கழுத்தில் அணியும் உத்தரீயம் அவர்களுடைய மார்பை மறைக்கும் என்பதைக் கடாஅக் களிற்றின் மேற் கட்படா மாதர் படாஅ முலேமேற் றுகில் ' (1087) என்னும் குறளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மைந்தர் மார்பில் சந்தனம் வந்து சேர்ந்ததே, அதைக் கழுவிவிட்டு அவர்கள் தங்கள் இல்லங்கட்குச் செல்லலாம் அல்லவா ? அவ்வாறு செய்யின் விருந்தினரை அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படாதல்லவா ? மார்புச் சந்தனத்தை கழுவுவதற்கு நீர் கிடைக்கவில்லையா அல்லது நேரம் கிடைக்க வில்லையா ? இளங்கோவடிகள் கூறும் இந்த நிகழ்ச்சி தமிழனுக்கு இழிவு தருவதொன்று என்பதில் ஐயமில்லை. இதனை உணர்ந்து அடியார்க்குநல்லார் சந்தனம் மைந்தர் மார்பில் வந்த விதத்தை வேறுவிதமாகக் கூறிச் சமாளிக்க முயல். கின்றனர், அவர், - இம்மகளிர் நெருங்குதலாலே மா ந் த ர் மார்பால் தள்ளிப் பெயர்கின்றனர் தம் மார்பிற் பொறித்தலால் எனவு. மாம் ' என்று கூறுகின்ருர். பரத்தையர் பெருங்கூட்டமாக நெருங்கி வந்தனராம், அந்தக் கூட்டத்தினிடையே மைந்தர் போகவேண்டியிருந்ததாம், அதல்ை மைந்தர் மார்பு மகளிர் சந்தனத்தைப் பெற நேர்ந்ததாம்.