பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 69 தொடங்கும்போது அடியார்க்குநல்லார் “ இனி வீதிவருணனை கூறுவார் ' என்று எழுதினர் அல்லவா ? அங்கு விதி வருணனை என்றது வீதிகளில் பரத்தையரும் காமுகரும் பரஸ்பரம் காதல் கொண்டதைக் கூறுவதாகவே இருந்தது என்பதைக் கண்டோம் அதுபோலவே இப்போதும் பரத்தையர் வீதிகளைப்பற்றி இளங்கோவடிகள் கூறியவற்றிற்கு உரை கூறி முடிந்ததும், அடியார்க்குநல்லார் . இத்துணையும் வீதிகளைச் சிறப்பித்துக் கூறிஞர் ' என்று எழுதுகின்றர். அக்காலத்து மக்களுக்கும் புலவர்களுக்கும் விதிகள் என்று கூறப்படுவனவெல்லாம் பரத்தையர் வீதிகளேதான் போலும் ! காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்ததுபோலவே மதுரைமா நகரத்திலும் மூன்று வகைப் பரத்தையர் இருந்தனர். ஆல்ை இம் மூவகைப் பரத்தையரும் செல்வர்களுக்கே உதவுபவர். செல்வர்களின் செல்வத்தின் அளவைவைத்தே மூவகைப்பட்டவர் ஆகின்றனர். ஏழைகளுக்கான பரத்தையரை இளங்கோவடிகள் காவற்கணிகையர் என்று இராக்கடை வேசையரைக் காவிரிப்பூம்பட்டின வருணனையில் கூறியது. போல் இங்கு கூறவில்லை. ஆல்ை ஏழைகளுக்கான பரந்தையரும் மதுரை மக்களுக்கு இருக்கவே செய்தனர் என்பது மதுரைக்காஞ்சி என்னும் காவியத்திலிருந்து தெரி: கின்றது. அத்தகையோர் வாழ்ந்தயிடத்தை மாங்குடிமருதனுர் மணங்கமழ் சேரி ' என்று கூறுகின்றனர். அதற்கு நச்சிர்ைக்கினியர் மணம் நாறுகின்ற பரத்தையர் சேரி ' என்று உரை கூறுகின்ருர். அந்தச் சேரி மதுரை நகர்க்கு வெளியே வையை ஆற்றின் வடகரையில் இருந்தது (மதுரை 329). கோவலன் மதுரை நகர்க்குள் வந்ததும் அந்நகரிலிருந்த பரத்தையரில் தாழ்ந்தவர் தெருக்களுள் நுழைந்தான். அங்கு கடைகழி மகளிர் தம் காதலஞ் செல்வரொடு முகில் தோய் மாடங்களில் வாழ்ந்தனர். ஒவ்வொரு மாடமும் ஏழடுக்கு மாடிகள் உடையது. அவற்றின் உச்சியில் மன்மதனுடைய மகரக்கொடிகள் பறந்துகொண்டிருக்கும்.