பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சிலப்பதிகாரம் இப்புற வீதி மகளிர் ஒவ்வொரு நாளும் காலை, நண். பகல், மாலை என்ற பொழுதுகளில் காமுகருடன் வேறுவேறு விளையாட்டுகளில் ஈடுபடுவர். காலையில் வருபுனல் வையை மருதோங்கு முன்துவ, விரிபூங் துருத்தி வெண்மணல் அடைகரை ஒங்குநீர் மாடமொடு நாவாய் இயக்கிப் பூம்பனே தழtஇப் புனலாட் டயர்வர் அதாவது இடையருது பெருகும் புனுலுடைய வையை ஆற்றில் பள்ளியோடம் முதலிய தோணிகளில் தங்கள் காதலருடன் ஏறி உல்லாசமாய்ச் செல்வர். புனேகளைத் தழுவி நீந்துவர், இவ்வாறு புனலாட்டயர்வர். அக்காலத்து மக்கள் நிகழ்த்திய புனல் விளையாட்டு என்பது இக்காலத்தில் எந்தயிடத்திலுமில்லை. நாம் ஆற்றுக்குப் போவது நீராடவே, நீரில் விளையாடவன்று. அக்காலத்து நீர்விளையாட்டின் விபரங்களைச் சங்ககால நூலாகிய பரிபாடலில் பரக்கக் காணலாம். மைந்தரும் மகளிரும் தாங்கள் எப்போதும் அணிந்துள்ள அழகிய அணிகளை நீக்கிவிட்டுப், புனலாடற்கேற்ற அணிகளே அணிவர். பெண்கள் பொற்பூவும் முத்துவடங்களும் வளைகளும் தொடிகளும் கட்டுவடம் கான் மோதிரம் போன்றவற்றையும் அணிவர். கூந்தலக்குழலாக முடிப்பர். சிலர் கூந்தலில் வெட்டிவேர் சேர்த்துத் தொடுத்த மலர் மாலையை அணிவர். சிலர் வாசனைத் தைலங்களைப் பூசிக் கண்ணுடியில் தங்கள் அழகை நோக்குவர். சிலர் யோசனை துரம் கமழும் வாசனைப் பொருள்களை உடலில் பூசுவர். சிலர் சந்தனத்தை மாற்றி அகிற் சாந்தை அப்புவர். சிலர் பஞ்சவாசங் கலந்த தாம்பூலம் மெல்லுவர். மைந்தரும் மகளிரும் வையை ஆற்றில் நீர்ப்போர் நடத்துவதற்குரிய படைக்கலங்களாக புழுகுநெய் இட்ட துருத்தியையும் பனிநீர் நிறைந்த கொம்பையும் எடுத்துக்கொள்வர். நீந்துவதற்கு உதவியாக வெள்ளே நெட்டியாற்