பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 71 செய்த மிதவையையும் நிறம் ஊட்டிய நெட்டியாற் செய்த தேரினையும் கொண்டுபோவர் (பரி. 6). நீராடுதற்கு வேண்டிய பத்துத் துவர்களையும்; புனலாடியபின் ஈரம் புலர்த்தும் பொருட்டுப் புAகக்கும் அகில் முதலியவற்றையும் அவற்றைப் புகைக்க அழலையும், அணிதற்கு பூந்துகில்களையும், சூடுவதற்குப் பூவையும், பூசுதற்குச் சந்தனத்தையும் சிலதியர் ஏந்திக்கொண்டு பின் தொடர்வர் (பரி. 6, 22). மைந்தரும் மகளிரும் குதிரைமீதும், பிடிமீதும், எருது பூண்ட வண்டியிலும், கோவேறு கழுதையிலும், குதிரை பூண்ட வண்டியிலும் சிவிகையின்மீதும் ஏறிச்செல்வர். (பரி. 10) வையையில் புதுப்புனல் வருங்காலத்தில் நடைபெறும் நீரணி என்னும் விழாவின்போது, மலராத முகைபோன்ற பருவத்தினரும், புதுமலர் மலர்ந்தது போன்று பருவத்தினரு மாகிய இளைய மாதரும், கருமயிருக்கிடையே நரை கலந்த கூந்தலுடையவரும், முழுநரையாகிய கூந்தலுடையவருமாகிய முதிய மாதரும், கற்புடை மகளிரும், காமக்கிழத்தியரும், காதற்பரத்தையரும், இற்பரத்தையரும், சேரிப்பரத்தையரும் இவர்களுடைய தோழியர்களும் ஏவன் மகளிரும் ஆற்றைநோக்கிச் செல்வர். இங்ங்னம் ஆற்றை அடையும் மைந்தரும் மகளிரும் நீர்ப்போர் செய்வர். சிலர் குதிரையையும் யானையையும் நீரினுள் செலுத்தி உழக்குவர். சிலர் வட்டினுல் அரக்கு நீரை வீசுவர். சிலர் மாலையைச் சுற்றி எறிவர். அவர்மீது சிலர் கொம்பு நீரை வீசுவர் (பரி. 11), சில பெண்கள் மலர் நிறைந்த ஆற்றிடைக்குறையிற் சென்று அங்குள்ள கூடாரத்தில் தங்கள் காதலருடன் வீற்றிருப்பர் (பரி. 1). சிலர் மண்ணுர் மணியின் அணர்குரல் வண்டார்ப்பத் தண்ணங் துவர்.பல ஊட்டிச் சல்ங்குடைவார் எண்ணெய் கழல இழைதுகள் பிசைவார் (10)