பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சிலப்பதிகாரம் அதாவது நீலமணிபோன்ற தம் கூந்தலில் பத்துத் துவர். களையும் தேய்த்துக்கொண்டு நீராடுவர். சிலர் எண்ணெய் நீங்குமாறு அரைப்பினைத் தேய்ப்பர். இவ்வாறு நீராடுவதால் வையை நதி பெண்கள் பூசிய பத்துவகைத் துவரில் ஊறிய நீரும் சந்தனக் குழம்பும் வாச எண்ணெயும், சூடிய பூக்களும் மைந்தர் தாரும் மகளிர் கோதையும் மணக்குமாறு சென்றது. மைந்தர்கள் வாழைத் தண்டைத் தழுவி நீந்துவர், ஒடத்திலேறிச் செலுத்துவர், மகளிர் இழைத்த சிற்றிலில் அட்ட சிறு சோற்றை உண்ணச் செல்வர். மகளிருடைய பந்தையும் கழங்கையும் களவுசெய்து நீரில் பாய்வர். நீர் விளையாட்டால் இளைத்த மகளிர் கரையில் வந்து கனல்பொருத அகலின் ஆவி காவெது நகின் முகடு மெழுகிய அளறுபடை திறந்து திசைமுழுது கமழ முகிலகடு கழிமதியின் உறை கழி வளர்த்து உறுாறவு மதியுணர் மகளென ஆம்பல்வாய் மடுப்பர் அதாவது அகிற்புகையால் உடலின் ஈரத்தைப் பலர்த்தி, எங்கும் கமழும் கலவைக் குழம்பைப் பூசுவர். தேவமகளிர் போல் வெப்பமான மதுவை உண்பர். வெண்துகிலேப் போர்ப்பர். கூந்தலில் வெள்ளையாடையைச் சுற்றி ஈரம் புலர முருக்குவர். ஆற்றங்கரையில் யாழும் மிடற்றுப் பாடலும் இசைந்து நிற்கும், சுருதியோடு குழல்கள் ஒலிக்கும், முழவுகள் ஆர்க்கும். தலைக்கோல் கூத்திகளும் பாணர்களும் ஆடலேத் தொடங்குவர். மைந்தரும் மகளிரும் இசைப்பயன் நுகர்வர். (பரி. 7). இவ்வாறு நீர்விளையாட்டு நிகழ்த்தும் ஆண்களும் பெண்களும் பட்டப்பகலில் ஆற்று நீரிலும் ஆற்றின் கரையிலும் பேசிய பேச்சுக்களையும் செய்த செயல்களேயும் பரி பாடலில் வையை பற்றியுள்ள பாடல்களிலிருந்து தெரிந்து