பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 75 சென்ருல் சிலதியர் அவர்களைச் சூழ்ந்து கையில் வாளே ஏந்திப் போவர். இத்தகைய வரிசைகளையும் அரசன் இவர்களுக்கு அளிப்பான். செழுங்குடிச் செல்வரும் வையங்காக்கும் அரசரும் இவர்களே நாடி வருவர். இவர்கள் அவரவர்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளும் ஆற்றலுடையவர். இ வர் க ள் சிலதியர் பொன் வண்ணத்தில் கள் தேறலத் தர வாங்கிப்பருகுவர். தஜலயாய பரத்தையர் முடியர சொடுங்கும் கடிமனே வாழ்க்கை உடையர். அதாவது அவர்கள் மாளிகைகள் அரசர்கள் தங்கள் பரிவாரங்களுடன் வந்து தங்கினும் வெளியே தெரியாத அளவு விசாலமானவை. அவற்றின் கூரை ஒடு வேயாமல் பொற்றகடு வேய்ந்திருக்கும். ஒவ்வொரு மாளிகையிலும் ஆடல் அரங்கம் ஒன்றிருக்கும். அதில் வீட்டுத் தலைவியான தலைக்கோலி ஆடுவாள், அப்போது தோரியமடத்தை வாரப்பாட்டையும் ஒரு கூத்தி தலைப்பாட்டையும் மற்ருெருகூத்தி இடைப்பாட்டையும் பாடுவாள். அப்போது அரசரும் அவரனைய செல்வர்களும் ஆடல் பாடல் அழகு மூன்றையும் அனுபவிப்பர். அருந்தவத்தோராகிய முனிவர்கள் கூட இம்மங்கையரின் கண் வலையில் பட்டால் அதினின்று தப்ப முடியாமல் தத்தளிப் பர். அவ்வாருயின் மற்றக் காமுகரைப்பற்றிக் கூறுவானே ன் ? காவிரிப்பூம்பட்டினத்தில் போலவே மதுரைமா நகரத்திலும் அரசன் முன்னுல் நாடகக் கணிகையருடைய நடன அரங்கேற்றம் நடைபெறும், அரசன் அவர்களுக்குத் தலைக்கோலிப்பட்டம் அளிப்பதோடு அவர்களுடைய ஆடல் பாடல் அழகு ஆகியவற்றிற்குத் தக்கவாறு ஒன்று முதல் ஆயிரத்தெண் கழஞ்சுவா அற்றைப் பரிசம் நிச்சயம் செய்வான் (ஊர்: 157-9). அரசன் செய்வது அதுமட்டுமன்று, தன்னுடைய பரிவாரத்துடன் தலைக்கோலியர் மாளிகையில் போய்த் தங்கு