பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 சிலப்பதிகாரம் - - வதுமுண்டு (ஊர்: 146-7). சாதாரணமாக அரசனுடைய மனைவியும் மக்களுமே அவனுடைய மேனியைத் தொடக்கூடும், ஆல்ை அக்காலத்து அரசர்கள் மேனியைத் தொடவும் தொட்டு அவர்களுடன் உய்யானம் என்னும் காவற்சோலையில் விளையாடவும் உரிமையுடையவராயிருந். தனர் பரத்தையர். அவர்களுக்குப் பலவிதமான வரிசை. களும் அளிப்பான் (ஊர்: 126-31). ஆகவே மதுரை நகரத்திலும் அரசன் முதல் எல்லா மக்களும் ாமக் கள்ளாட்டயர்ந்து வந்தனர் என்று தெரிகிறது. இதற்கு முடி மணியாக மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுஞ்செழியன் செயல் ஒன்று உளது. பாண்டியன் நெடுஞ்செழியன் தன்னுடைய மனைவி கோப்பெருந்தேவியும் அமைச்சர் பிரதானிகளும் புடைசூழ அரசவையில் கொலு வீற்றிருந்தான். அவன் முன்னர் நாடக மகளிர் ஆடியும் பாடியும் அவையோரை ஆனந்திக்கச் செய்தனர். அப்போது கோப்பெருந்தேவி கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன. என்று மனத்தில் வருத்தமுற்றனள். தன் கணவனுடைய மனம் ஆடற்கலையிலும் பாடற்கலையிலும் ஈடுபட்டிருப்பது கண்டு மனைவி மகிழவேண்டியிருக்க வருத்தம் கொண்ட தேன் ? ஆடற்கலையும் பாடற்கலையும் ஆன்ம வளர்ச்சிக்கு அருந்துணை செய்வன தான், ஆல்ை அரசன் ஆடற்கலையி. லும் பாடற்கலையிலும் ஈடுபடவில்லை. அவன் மனத்தைக் கொள்ளே கொண்டது ஆடன் மகளிரின் அழகே. மகளிர் அழகைக்கண்டு மகிழ்வதும் ஒரு கலேயே, ஆளுல் அதுவும் இயற்கைத் தத்துவத்தோடும் இறைத் தத்துவத்தோடும் பொருந்தும்போதே நற்கலையாம். அப்படிக்கின்றி மன்னன் மனத்தை ஈர்த்ததுபோல் இறைச்சித் தத்துவத்துடன் இணைந்ததாயின் அது தீயதே. அவன் நாடக மகளிருடைய ஆடலேயும் பாடலேயும் அனுபவிக்கவில்லை, அவர்களுடைய