பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சிலப்பதிகாரம் - --- - கிழார் நலங்கிள்ளி விறலியர்க்குப் பூவிலே தருவதையும் அவனுடைய புகழ்ச்செயல்களில் ஒன் ருகவே கருதினர், கருதிப் பாடினர், அந்தப் பாடலேப் புறநாநூற்றைத் தொகுத்த புலவர் ஏட்டில் எழுதிப் பாதுகாத்துவிட்டார், ஆணுல் இக்காலத்துப் புலவர் ஒருவர் ஐயோ! கோவூர்கிழார் இவ்வாறு பாடிவிட்டாரே, பிறமொழியாளர் கண்டால் நம் தமிழ் மன்னர்களே இழிவாகக் கருதுவார்களே’ என்று மனம் கவன்று போலும் மேற்கூறிய கோவூர்கிழாரின் வரிகளுக்கு,

  • விறலியர்க்குத் தரும் பூவிற்கு மாருக, அப்பூவின் விலையாகப் பாண்டியற்குரிய மதுரையை வென்று தருகுவன்' என்று பொருள் கூறுகின்ருர், இது முற்றிலும் பொருந்தாத பொருள்.

நலங்கிள்ளி விறலியர்க்கு ஏதோ ஒரு பூவைக் கொடுத்ததுபோலவும், அதை மீண்டும் திரும்ப வாங்கிக்கொண்டது போலவும், வாங்கிக்கொண்டு அதன் விலையை விறலியர்க்குத் தந்ததுபோலவும் கூறுகிருர். நலங்கிள்ளி விறலியர்க்கு எந்தப் பூவைத் தந்தான் ? தந்த பூவை ஏன் திரும்பப் பெற்ருன் ? விறலியர் ! பூவிலே பெறுக என்பது விறலியரே ! நீங்கள் தந்த பூவிற்குரிய விலையைத் தருகிறேன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று பொருள்படுமேயன்றி, "விறலியரே! நான் உங்களுக்குத் தந்து திரும்ப வாங்கிய பூவிற்குரிய விலையைத் தருகிறேன், பெற்றுக்கொள்ளுங்கள் ' என்று பொருள்படாது. விறலியர் அரசனுக்குப் பூவைத் தந்தனர், அரசன் விறலியர்க்குத் தரவில்லை. பூ என்பது பூப்பு என்பதுடன் தொடர்புடையது, போகம் என்று பொருள்படும். போகம் புரக்கும் பொதுவர் ' (மணி, 28) என்று சாத்தனர் கூறுவது இப்பொருளிலேயே.