பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சிலப்பதிகாரம் இதுகாறும் இளங்கோவடிகள் வர்ணிக்கும் காவிரிப்பூம்பட்டினத்தையும் மதுரைமா நகரத்தையும் ஆராய்ந்தோம். அந்த நகரத்திலிருந்த மக்கள் செல்வத்தில் திளைத்தார்கள். ஆடம்பர வாழ்வின் அடிவரை ஆழ்ந்திருந்தார்கள். இன்ப மாக வாழ்வதற்கு இக்காலத்தில்கூடக் காணமுடியாத பல. விதமான உபகரணங்களே உடையவர்களாக இருந்தார்கள். இன்றும் தமிழ்நாட்டில் ஏழடுக்கு மாடிகள் உள்ள வீடுகள் உண்டாகவில்லை. தங்கத்தகட்டைக் கொண்டு கூரை வேய்வது எந்தக் காலத்திலும் நடக்கப்போவதில்லை. இவற்றையெல்லாம் கண்டதும் இக்காலத்து அறிஞர்கள் ' என்னே, அக்காலத்து மக்களின் நாகரிகத்தின் உயர்வு : என்று மூக்குமேல் விரல்வைத்து இறும்பூது அடைகின்றனர். ஆனல் நாகரிகம் என்பது பொருட்செல்வத்தின் மிகுதி. யையும் அதனுல் அடையும் இன்ப சாதனங்களின் தொகை. யையும் பொறுத்ததன்று. இ வ. ற் ைற ப் பயன்படுத்தும் மக்களின் ஒழுக்கத்தையே பொறுத்ததாகும். எந்த மக்கள் ஒழுக்கமுடையவர்களோ அவர்களே நாகரிகமுடையவர்கள். பொருட்செல்வம் பூரியார் கண்ணுமுள என்று தம்முடைய நன்மையையும் பிறருடைய நன்மையையும் நாடுவோர் அனைவர்க்கும் அழியாத எச்சரிக்கையாகத் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கூறிக்கொண். டிருக்கின்ருர், அறநெறி வழுவிய பூரியார் எத்துணைச் செல்வராயினும் நாகரிகமுடையவராகமாட்டார், அநாகரிகரே ஆவர். அற. நெறி வழுவாத சீரியர் எத்துணை வறிஞராயினும் அவரே நாகரிகம் உடையவர். சாக்ரட்டீசும் இ .ே ய சு. வு ம் வள்ளுவரும் காந்தியும் செல்வம் படையாதவர்கள், ஆயினும் அவர்களே அநாகரிகர் என்று யாரும் கூறமாட்டார். அவர்களை நாகரிகர் என்று மட்டுமின்றி நாகரிகத்தின் சிகரமானவர் என்றுகூட அறிஞர்கள் கருதுகின் ருர்கள்.