பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 83 - - - - ഈ~ൗജ பெல்ஜியம் மிகச் சிறியநாடு. ஜெர்மனி மிகுந்த பலமும் பணமும் படைத்த நாடு. ஆயினும் முதல் உலகயுத்தத்தில் பெல்ஜியம் நடுநிலை நாடாயிருந்தபோதிலும் ஜெர்மனி அதன் மீது பாய்ந்தது. அந்த அநியாயத்தை எதிர்ப்பதே அறம் என்று கருதியது பெல்ஜியம். ஆதலால் அறிஞர்கள் எல்லோரும் பெல்ஜியத்தை நாகரிகமுடைய நாடாகவும் ஜெர்மனியை அநாகரிக நாடாகவும் கருதினர்கள். ஆகவே தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் அற. வொழுக்கமே நாகரிகத்தின் ஆணிவேராகும். அங்ங்ன. மிருக்கச் சிலப்பதிகார காலத்து மக்கள் வாழ்வை நாகரிகம் என்று கூறுவது அணுவளவும் பொருந்தாது. எதைப் பாராட்டுகிறோமோ அதுவாக ஆவோம் என்பது எல்லோரும் இதயத்தில் பதியவைத்துக் கொள்ளவேண்டிய உளநூல் உண்மைகளுள் ஒன்று. ஆதலால் ஒழுக்கமில்லாத மக்களை உயர்ந்த நாகரிகமுடையவர் என்று பாராட்டுவது மீண்டும் அந்த நிலையை உண்டாக்க அடிகோலுவதாகும். அக்காலத்து மக்கள் வாழ்ந்ததுபோல் இக்காலத்தும் வாழ்வதாயின் அதனினும் தமிழ்நாட்டுக்கு உண்டாகும் துர் அதிர்ஷ்டம் வேறு இருக்க முடியாது. ஆதலால் அறிஞர்கள் அக்காலத்து மக்கள் இவ்வாறு வாழ்ந்தார்கள் என்று கூறுவதுடன் அமையவேண்டுமே. யன்றி, அக்காலத்து மக்கள் வாழ்ந்த முறை நாகரிக வாழ்வு என்று கூறுவது முற்றிலும் தவறு. அது நாட்டுக்குக் கேடு சூழ்வதேயாகும். சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் செல்வம் நிறையப் படைத்திருந்தார்கள். ஆனல் அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்தினர்கள். அதைப் பொறுத்தே அவர்களுடைய வாழ்வின் உயர்வையும் தாழ்வையும் கணிக்கத் தகும். செல்வம் படைத்தால் அதை எவ்வாறு செலவு செய்யவேண்டும் என்பது குறித்துத் திருவள்ளுவர் சிலப்பதிகார காலத்துக்கு முன்னரேயே